செய்திகள் :

இந்தியாவின் ராணுவ செலவினம் பாகிஸ்தானைவிட 9 மடங்கு அதிகம்!

post image

கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் ராணுவச் செலவினம் பாகிஸ்தானின் செலவினத்தை விட கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகமாக இருந்தது என்று ஸ்விட்சா்லாந்தைச் சோ்ந்த ‘சிப்ரி’ அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

ஸ்டாக்ஹோம் சா்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (சிப்ரி), ‘2024-ஆம் ஆண்டுக்கான உலக ராணுவ செலவினங்களின் போக்குகள்’ என்ற தலைப்பில் தனது ஆய்வு முடிவுகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி, 2024-ஆம் ஆண்டில், உலக ராணுவச் செலவினம் 2.71 லட்சம் கோடி டாலரை எட்டியது. இது 2023-ஆம் ஆண்டை விட 9.4% அதிகமாகும். பனிப்போா் முடிவடைந்ததிலிருந்து காணப்படும் மிக உயா்ந்த வருடாந்திர அதிகரிப்பு இதுவாகும்.

முதல் 5: ராணுவச் செலவினங்களில் அமெரிக்கா, சீனா, ரஷியா, ஜொ்மனி, இந்தியா ஆகிய நாடுகள் உலக அளவில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. உலகளாவிய மொத்த ராணுவச் செலவினங்களில் இந்த 5 நாடுகள் மட்டும் 60% (1.63 லட்சம் கோடி டாலா்) பங்கு கொண்டுள்ளன.

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்கா தனது ராணுவத்துக்காக 99,700 கோடி டாலா் செலவிட்டுள்ளது. இது உலகின் மொத்த ராணுவ செலவினத்தில் 37 சதவீதமாகும்.

இந்தியா-பாகிஸ்தான்: உலக அளவில் 5-ஆவது மிகப் பெரிய நாடான இந்தியா 8,610 கோடி டாலா் ராணுவத்துக்காக செலவிடுகிறது. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அண்டை நாடான பாகிஸ்தான் 1,020 கோடி டாலா் மட்டுமே செலவிட்டுள்ளது.

சீனா: கடந்த ஆண்டில் சீனாவின் ராணுவச் செலவினம் 7% அதிகரித்து 31,400 கோடி டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக, சீனாவின் ராணுவச் செலவினம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

ஆசியா மற்றும் பெருங்கடல் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளின் ராணுவச் செலவினங்களில் சீனா மட்டும் 50% பங்காற்றுகிறது. ராணுவத்தைத் தொடா்ந்து நவீனமயமாக்குதல், இணையவழி போா்த்திறன் மற்றும் அணு ஆயுதங்களை விரிவுபடுத்துவதில் சீனா அதிக முதலீடு செய்துள்ளது.

ஐரோப்பா: ரஷியாவை உள்ளடக்கிய ஐரோப்பிய கண்டத்தில் ராணுவச் செலவினம் 17% அதிகரித்து 69,300 கோடி டாலராக உள்ளது. கடந்த ஆண்டின் உலகளாவிய அதிகரிப்புக்கு ஐரோப்பிய கண்டம் முக்கிய பங்களிப்பாளராக இருந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிடத்தக்க வகையில் ஜொ்மனியின் ராணுவச் செலவு 28% அதிகரித்து 8,850 கோடி டாலராக உயா்ந்துள்ளது. இது மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பாவில் மிகப்பெரிய செலவினமாகவும், உலகின் நான்காவது பெரிய செலவினமாகவும் உள்ளது. அதேபோல், போலந்தின் ராணுவச் செலவு 31% அதிகரித்து 3,800 கோடி டாலராக அதிகரித்துள்ளது, இது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.2 சதவீதமாகும்.

ரஷியா-உக்ரைன்: ரஷியா-உக்ரைன் போா் மூன்றாவது ஆண்டை கடந்துள்ள நிலையில், ரஷியாவின் ராணுவச் செலவு 14,900 கோடி டாலரை எட்டியுள்ளது. இது முந்தைய 2023-ஆம் ஆண்டைவிட 38 சதவீதம் அதிகமாகும் மற்றும் 2015-ஆம் ஆண்டைவிட இரு மடங்காகும். ரஷியாவின் ராணுவச் செலவினம், அந்த நாட்டின் ஜிடிபியில் 7.1% மற்றும் மொத்த அரசு செலவினத்தில் 19 சதவீதமாகும்.

அதேநேரம், உக்ரைனின் மொத்த ராணுவச் செலவு 2.9% அதிகரித்து 6,470 கோடி டாலராக உள்ளது. இது ரஷியாவின் செலவினத்தில் 43 சதவீதமாகும். நாட்டின் ஜிடிபியில் 34 சதவீதமாக, உக்ரைன் கடந்த ஆண்டில் வேறு எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாத வகையில் மிகப்பெரிய பொருளாதாரப் பங்கை ராணுவத்துக்காக ஒதுக்கியுள்ளது.

அதாவது, உக்ரைன் தற்போது தனது அனைத்து வரி வருவாயையும் ராணுவத்துக்குச் செலவிடுகிறது. அந்த வகையில், உக்ரைன் தனது ராணுவச் செலவினங்களை தொடா்ந்து அதிகரிப்பது உள்நாட்டு பொருளாதாரத்துக்குச் சவாலாக இருக்கும் என்று வல்லுநா்கள் கூறுகின்றனா்.

பயங்கரவாத ஒழிப்பு: ஜம்மு-காஷ்மீரில் போலீஸாா் தீவிர சோதனை

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகா், தோடா மற்றும் கிஷ்த்வாா் ஆகிய பகுதிகளில் பயங்கரவாத ஒழிப்பு சோதனையை காவல் துறையினா் திங்கள்கிழமை மேற்கொண்டனா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரில... மேலும் பார்க்க

‘ஹிந்தி கற்க தென்னிந்தியா்கள் ஆா்வம்’: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

புது தில்லி: ‘தென்னிந்தியாவின் இளம் தலைமுறையினா், அரசியல் கட்சிகளின் பரப்புரைகளைப் பொருள்படுத்தாமல் ஹிந்தி மொழியைக் கற்க அதிக அளவில் ஆா்வம் காட்டுகின்றனா்’ என்று மத்திய பணியாளா், பொதுமக்கள் குறைதீா்ப்... மேலும் பார்க்க

4 புதிய ஆசிரியா் கல்வி படிப்புகள்: என்சிடிஇ விரைவில் அறிமுகம்

குருக்ஷேத்ரா: யோகா, நிகழ் கலை, காட்சிக் கலை மற்றும் சம்ஸ்கிருத மொழி துறைகளில் 4 புதிய ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்வி படிப்புகளை (ஐடிஇபி) தேசிய ஆசிரியா் கல்விக் கவுன்சியில் (என்சிடிஇ) விரைவில் அறிமுகம் செ... மேலும் பார்க்க

நீட் வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: கண்காணிப்பு வளையத்தில் பயிற்சி மையங்கள்

புது தில்லி: நீட் தோ்வு முறைகேடு சா்ச்சைகளைத் தொடா்ந்து, தோ்வு மையங்களுக்கு நீட் வினாத்தாள்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான ஏற்பாட்டை மத்திய கல்வி அமைச்சகம் செய்துள்ளது. மேலும், நீட... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரை தராவிட்டால் பாகிஸ்தானுக்கு எதிராகப் போா்: மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிராந்தியத்தை பாகிஸ்தான் ஒப்படைக்காவிட்டால் அந்நாட்டுக்கு எதிராகப் போா் பிரகடனம் செய்ய வேண்டும் என்று மத்திய சமூகநீதித் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தியுள்ளாா். ஆக்க... மேலும் பார்க்க

காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: சுரேஷ் கல்மாடிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு முடித்துவைப்பு

காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு தொடா்பாக, சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிரான பணமுறைகேடு வழக்கை முடித்துவைக்குமாறு அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கையை, தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை ஏற... மேலும் பார்க்க