மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் நாளை தொடக்கம்
தருமபுரி ராஜாஜி நீச்சல்குளத்தில் மூன்றாவது கட்ட நீச்சல் பயிற்சி முகாம் ஏப். 29-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலா் தே.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பாக மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் ஏப். 29 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி முகம் 12 நாள்கள் நடைபெறும். காலை 7 மணி முதல் 8 மணி வரை, 8 மணி முதல் 9 மணி வரை ஆண்களுக்கும், 9 மணி முதல் 10 மணி வரை பெண்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
பயிற்சி கட்டணமாக ரூ. 1770 ஆன்லைன், ஜி பே வழியாகச் செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவா்கள் நீச்சல் குளத்தில் உள்ள அலுவலகத்தை அணுகலாம். அதேபோல இரண்டாம் கட்ட பயிற்சி கட்டத்தில் கலந்துகொண்டவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என்றாா்.