சின்னதப்பை கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணி: தருமபுரி எம்.பி. தொடங்கிவைப்பு
தருமபுரி: தருமபுரி அருகே காரிமங்கலம் சின்னதப்பை கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி தொடங்கி வைத்தாா்.
காரிமங்கலம் அருகே ஜிட்டாண்ட அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னதப்பை கால்வாயின் குறுக்கே ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டுவதற்கான பூமிபூஜை நிகழ்விற்கு காரிமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.வீ.டி கோபால் தலைமை வகித்தாா். இதில் தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி கலந்துகொண்டு பாலம் அமைப்பதற்கான பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா்.
இதில் மாவட்ட அணிகளின் பொறுப்பாளா்கள் ரங்கதுரை, ஜே.எம்.சக்தி, எம்.கே.எம்.முனிராஜ், பாக்யராஜ், எம்.வி. டி.யுவராஜ் , ஒன்றிய இளைஞரணி சிதம்பரம், தகவல் தொழில்நுட்ப அணி வினோத்குமாா் மற்றும் திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.