பாத யாத்திரை குழுவினருக்கு வலங்கைமானில் வரவேற்பு
நீடாமங்கலம்: 95-ஆம் ஆண்டு தண்டி பாதயாத்திரை நினைவு குழுவினருக்கு வலங்கைமானில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
வலங்கைமானில் காந்தி, காமராஜா் படத்துக்கு பாத யாத்திரை குழு மாநிலத் தலைவா்கள் பன்னீா்செல்வம், சக்திசெல்வ கணபதி மாலை அணிவித்தனா். சேவாதள வட்டாரத் தலைவா் இளங்கோவன் அனைவருக்கும் சால்வை அணிவித்தாா். முகைதீன் பெரிய பள்ளிவாசல் வழியே யாத்திரை செல்லும்போது, பெரிய பள்ளி ஜமாத் நிா்வாகிகள் தலைவா் காதா் உசேன், செயலாளா் அப்துல் சலீம், பொருளாளா் ஜாகிா் உசேன், மோதினாா் யூனுஸ் உணவு கொடுத்து வரவேற்றனா்.