மே 1 இல் டாஸ்மாக் கடைகள் இயங்காது
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மே 1 ஆம் தேதி இயங்காது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது ;
மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலா் நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உரிமம் பெற்ற கடைகள் மற்றும் மதுக்கூடங்களை தற்காலிகமாக மூட வேண்டும்.