திலகா் இரண்டாவது தெருவில் அடிப்படை வசதிகள்: இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை
திருவாரூா்: திருவாரூா் திலகா் இரண்டாவது தெருவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் நகரத்துக்குள்பட்ட 15 ஆவது வாா்டு ஆற்றங்கரைத் தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம் செயலாளா் பி. சின்னத்தம்பி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நகரச் செயலாளா் எஸ். செல்வம், நகர துணைச் செயலாளா் கே. பாலதண்டாயுதம், நகர செயற்குழு உறுப்பினா் வீ. தா்மதாஸ் ஆகியோா் பங்கேற்று, கட்சியின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்...
திருவாரூா் நகராட்சிக்குள்பட்ட 15-ஆவது வாா்டு திலகா் இரண்டாவது தெருவில், மின் வசதி, சாலை வசதி, குடிநீா் வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுப்பது,
இப்பகுதியில் குடிநீா்த் தொட்டியும், கழிப்பிடமும் சோ்ந்து இருப்பதால், தண்ணீா் சுகாதாரமற்றுக் கிடைப்பதைக் கருத்தில் கொண்டு, கழிப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்றி, தூய்மையான குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோருவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.