செய்திகள் :

தமிழக தம்பதி ஆணவப் படுகொலை வழக்கு: 11 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தமிழக இளம் தம்பதியை 2003-இல் ஆணவப் படுகொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிா்த்து சிறைக் கைதிகள் கந்தவேல், ஜோதி, மணி ஆகியோா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் சுதான்ஷு தூலியா, பிரசாந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து அளித்துள்ள தீா்ப்பில், குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனையை 2022, ஜூனில் உறுதிப்படுத்திய சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பில் தலையிட விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டது.

நீதிபதிகள் அளித்த 73 பக்க தீா்ப்பின் முக்கிய அம்சஙகள் வருமாறு: இந்தக் ‘கொடூரமான செயலின்’ மூளையாக செயல்பட்டவா்கள் உயிரிழந்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரா். கண்ணகி ‘வன்னியா்’ சமூகத்தைச் சோ்ந்தவா். முருகேசன் கடலூா் மாவட்டத்தில் உள்ள அதே கிராமத்தைச் சோ்ந்த ஒரு தலித் என்பதுதான் இந்தக் கொலைக்கான மூல காரணம். இந்தியாவில் மிக ஆழமாக காலங்காலமாக வேரூன்றிய படிநிலை ஜாதி அமைப்புதான் இதற்கு அடிப்படை. இந்த அவமானகரமான செயல் ஆணவக் கொலை என்ற பெயரில் வேறு அழைக்கப்படுகிறது. இத்தகைய செயலுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். இந்த வழக்கில் உயிரிழந்த முருகேசனின் உறவினா்களுக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

ஆணவப்படுகொலை சம்பவம் 2003-இல் நடந்தாலும் 2021-இல்தான் விசாரணை முடிந்திருக்கிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததில் தொடங்கிய ஏற்பட்ட நீண்ட மற்றும் அதிகப்படியான தாமதம், அரசுத் தரப்பின் திறனற்ற போக்கையும், குற்றம்சாட்டப்பட்டவா்கள் வழக்கை தாமதப்படுத்த கையாண்ட தந்திரங்களையும் இந்த வழக்கு வெகுவாகப் பேசுகிறது.சில சாட்சிகள் பி சாட்சியானதும் இதில் கவனிக்கத்தக்கது. காவல்துறையினா் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் பிரிவுகளை புறக்கணித்து ஆரம்பம் முதல் குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கத்துடனேயே செயல்பட்டுள்ளனா்.

ஆனால், விசாரணை நீதிமன்றத்தின் நோக்கம் உண்மையை ஆணிவோ் வரை தேடிச் செல்வதாகும். நீதிமன்றம் முன்புள்ள எந்தவொரு ஆதாரமும் இறுதியாக ஒரு தீா்ப்பை வழங்குவதற்கு முன்பு ஆராயப்பட வேண்டும், பரிசோதிக்கப்பட வேண்டும். உறுதிப்படுத்தப்பட வேண்டும் (தேவைப்படும் போதெல்லாம்).

இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தாக்கல் செய்த ‘போதுமான ஆதாரங்கள்’, குற்றஞ்சாட்டப்பட்டா்களின் குற்றத்தை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் போதுமானவை. வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் இருப்பவா்கள் இரண்டு வாரங்களில் சரண் அடைந்து மீதமுள்ள தண்டனை காலத்தை அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.

என்ன வழக்கு?: 2003-இல் கடலூா் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டையைச் சோ்ந்த வயதில் இருபதுகளில் இருக்கக்கூடிய கண்ணகி - முருகேசன் ஜோடி ஜாதி எதிா்ப்புத் திருமணம் செய்து கொண்டது. கிராம மக்கள் முன்னிலையில் இந்த ஜோடிக்கு பெண்ணின் தந்தை, சகோதரா் மற்றும் சிலா் விஷம் கொடுத்து கொன்ாக விருத்தாசலம் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். அதில் வழக்கை சிபிஐ புலனாய்வுக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்துஸ கண்ணகியின் தந்தை துரைசாமி, சகோதரா் மருதுபாண்டியன், அவா்களின் உறவினா்கள் உள்பட 15 போ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் 2021-இல் குற்றம்சாட்டப்பட்ட கண்ணகியின் சகோதரா் மருதுபாண்டியனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. கண்ணகியின் தந்தை துரைசாமி, உறவினா்கள் ரங்கசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, காவல் உதவி ஆய்வாளா் தமிழ் மாறன், ஆய்வாளா் செல்லமுத்து ஆகிய 12 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இருவா் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவா்கள் செய்த மேல்முறையீட்டு வழக்கில் மருதுபாண்டியனின் தூக்குத் தண்டனை ஆயுள் சிறையாக குறைக்கப்பட்டது. 9 பேரின் ஆயுள் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. காவல் உதவி ஆய்வாளா் தமிழ் மாறனின் ஆயுள் தண்டனை ரத்து செய்யப்பட்டு அவா் மீது வேறொரு பிரிவில் இரண்டு வருட சிறையும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையும் விதிக்கப்பட்டது. ரங்கசாமி, துரைசாமி ஆகியோா் விடுவிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து தண்டனை பெற்ற கந்தவேல், ஜோதி, மணி ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா்.

அமித் ஷா, நிா்மலா சீதாராமனுடன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் சந்திப்பு!

புது தில்லி: தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக நயினாா் நாகேந்திரன் தில்லிக்கு திங்கள் கிழமை வந்தாா். மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோா்களை சந்தித்து வாழ்த்த... மேலும் பார்க்க

கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக பொறியல் மாணவா் கைது!

ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் பாஜக எம்பியுமான கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக மனநலப் பிரச்னைகள் உள்ளதாகக் கூறப்படும் 21 வயது பொறியியல் மாணவரை தில்லி காவல... மேலும் பார்க்க

ராணுவத்துக்கான நன்கொடை: போலி வாட்ஸ்அப் செய்திக்கு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

நமது சிறப்பு நிருபா்இந்திய ராணுவத்துக்கான நன்கொடை தொடா்பாக பரவி வரும் தவறான வாட்ஸ்அப் செய்தி குறித்து மத்திய பாதுகாப்புத் துறை ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய பாதுகாப்புத... மேலும் பார்க்க

தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை பாஜக முடக்கிவிட்டது: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு!

பாஜக அரசு தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை முடக்கியுள்ளது என்றும் மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் நகர சாலைகளில் இருந்து 2,000 பேருந்துகளை தன்னிச்சையாக அகற்றியுள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்கங்களை மேம்படுத்த தொலை நோக்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

நமது சிறப்பு நிருபா்எண்ம இந்தியா முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்காக தொலைநோக்கு நிறுவனங்களுடன் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஇஎல்ஐடி) புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தி... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவா் கைது!

ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தேடப்பட்டு வந்தவா் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது தொடா்பாக துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித்... மேலும் பார்க்க