செய்திகள் :

`என் சிறுநீரகத்தை பீர் குடிப்பதுபோல் 15 நாள் குடித்தேன்' - நடிகர் பரேஸ் ராவல்

post image

மராத்தி மற்றும் இந்தி படங்களில் நடித்து வருபவர் பரேஸ் ராவல். இவர் தனது காலில் ஏற்பட்ட காயம் குணமாக செய்து கொண்ட வைத்தியம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அனைவரும் கோமியத்தை குடிப்பது குறித்து கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் நடிகர் பரேஸ் ராவல் தனது சொந்த சிறுநீரை குடித்ததாகத் தெரிவித்தது அனைவரையும் அதிர வைத்தது. இது குறித்து பரேஸ் ராவல் அளித்துள்ள பேட்டியில், ''ஒரு முறை நான் காலில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டேன். என்னைப் பார்க்க நடிகர் அஜய் தேவ்கன் தந்தை வீரு தேவ்கன் வந்திருந்தார். என்ன நடந்தது என்று கேட்டதற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது என்று சொன்னேன். உடனே, `காயம் குணமாக நான் ஒரு தீர்வு சொன்னால் அதை கேட்கத் தயாரா?' என்று கேட்டார். உடனே நானும் சொல்லுங்கள் கேட்கிறேன் என்று சொன்னேன். அதற்கு தினமும் காலையில் சொந்த சிறுநீரகத்தை குடிக்கும்படி சொன்னார்.

அனைத்து வீரர்களும் இதைச் செய்திருக்கிறார்கள். சிறுநீர் குடிப்பதால் எதுவும் ஆகாது. காலை எழுந்தவுடன் சிறுநீரகத்தை குடிக்கும்படி சொன்னார். மது அருந்துவதை நிறுத்தச்சொன்னார். அதோடு சாப்பாட்டை சரியான நேரத்தில் சாப்பிடும்படி சொன்னார். நான் இறைச்சி மற்றும் புகையிலையையும் நிறுத்திவிட்டேன். சிறுநீரை குடிக்கும்போது ஒரே மடக்கில் குடித்துவிடக்கூடாது என்றும், பீர் குடிப்பது போன்று அனுபவித்து குடிக்கவேண்டும் என்றும் சொன்னார். அவர் சொன்னபடி 15 நாள் குடித்தேன். அதன் பிறகு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது எனது காயம் குணமாகி இருந்தது. டாக்டர்களே ஆச்சரியப்பட்டனர். வழக்கமாக இந்த காயம் குணமாக 2 முதல் 2.5 மாதங்கள் பிடிக்கும். ஆனால் எனது காயம் ஒன்றரை மாதத்திற்குள் குணமாகியிருந்தது. இதில் அதிசயம் நடந்திருந்தது''என்று தெரிவித்தார்.

"கிராமத்தில் வாழ்க்கை; படப்பிடிப்புக்கு மட்டும் மும்பை" - நடிகர் நானா படேகர் ஓப்பன் டாக்

பாலிவுட் நடிகர் நானா படேகர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறார். 72 கோடிக்குச் சொத்துக்கள் இருக்கின்றன.ஆனால் இவ்வளவு சொத்துக்கள் இருந்தும் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார். புனே அருகி... மேலும் பார்க்க

Homebound: முதல் முதலாக இந்திய திரைப்படத்தில் இணையும் Martin Scorsese!

ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் மார்ட்டின்ஸ்கார்செஸி, இந்திய சினிமா இயக்குநர் நீரஜ் கைவான் இயக்கிய ஹோம்பவுண்ட் திரைப்பட்டத்தில் நிர்வாக தயாரிப்பாளராக பங்களித்துள்ளார். நீரஜ் கைவானின்... மேலும் பார்க்க

மும்பை: மன்னத் பங்களாவைக் காலி செய்த ஷாருக்கான்; கவலையில் உள்ளூர் வியாபாரிகள்; காரணம் என்ன?

மன்னத் பங்களாபாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பை பாந்திராவில் உள்ள தனது மன்னத் பங்களாவிலிருந்து சமீபத்தில் காலி செய்துவிட்டு அருகில் அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்கு மாடிகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு... மேலும் பார்க்க

Coolie - War 2: `சாரி சாரி, என் தவறுதான்..!’ - ரஜினி குறித்து ஹிருத்திக் ரோஷன் சொன்ன ஃப்ளாஷ்பேக்

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது `கூலி’. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமான வெளியாகிறது. பாலிவுட்டில் அதே நாளில்... மேலும் பார்க்க

Urvashi Rautela: `பத்ரிநாத்தில் எனக்கு கோயில்' - நடிகையின் பேச்சால் மதகுருக்கள் கோபம்; என்ன நடந்தது?

உத்தராகாண்டில் தனது பெயரில் கோவில் இருப்பதாக நடிகை ஊர்வசி ரவுடேலா கூறியதற்கு கடும் எதிர்வினைகள் எழுந்துள்ளன. பத்ரிநாத் பகுதியில் வசிக்கும் மக்கள், சமய அதிகாரிகள் மற்றும் மத குருக்கள் இதற்கு எதிர்ப்பு ... மேலும் பார்க்க

Anurag Kashyap: `சாதி இல்லை என்றால் நீங்களெல்லாம் யார்?’ - பூலே பட விவகாரத்தில் அனுராக் காட்டம்

அனுராக் கஷ்யப் பூலே திரைப்படத்துக்கு ஏற்பட்ட பிரச்னைகளைத் தொடர்ந்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மற்றும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சமூகத்தினர் மீது விமர்சனங்களை வைத்துள்ளார். சமூக சீர்திர... மேலும் பார்க்க