செய்திகள் :

Anurag Kashyap: `சாதி இல்லை என்றால் நீங்களெல்லாம் யார்?’ - பூலே பட விவகாரத்தில் அனுராக் காட்டம்

post image

அனுராக் கஷ்யப் பூலே திரைப்படத்துக்கு ஏற்பட்ட பிரச்னைகளைத் தொடர்ந்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மற்றும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சமூகத்தினர் மீது விமர்சனங்களை வைத்துள்ளார்.

சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலேவின் வாழ்க்கை வரலாற்றைத் மையமாக எடுக்கப்பட்டத் திரைப்படம் பூலே.

Phule Movie

அனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடித்துள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகவிருந்தது. தற்போது பல்வேறு பிரச்னைகளால் ஏப்ரல் 25-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பூலே படத்துக்கு திரைப்பட தணிக்கை வாரியம் யு சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆனால், சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

‘மஹர்’, ‘மாங்’, ‘பேஷ்வாய்’ உள்ளிட்ட சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்றும், "3000 ஆண்டுகள் அடிமைத்தனம்" என்பதை "எத்தனை ஆண்டுகள் அடிமைத்தனம்" என மாற்ற வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை இயக்குநர் மகாதேவன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் அனுராஜ் கஷ்யப். அது ஒரு மோசடி அமைப்பு என தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சாடியுள்ளார்.

"முழு அமைப்பும் மோசடியானது"

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

"பஞ்சாப் 95, டீஸ், தடக் 2, புலே - இன்னும் எத்தனை படங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று எனக்குத் தெரியவில்லை... இந்த சாதிய, பிராந்தியவாத, இனவெறி அரசாங்கம் கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்க்க வெட்கப்படுகிறது." எனக் கூறியுள்ளார். "அவர்களை எது தொந்தரவு செய்கிறது என்பதை வெளிப்படையாகக் கூட சொல்ல முடியாத கோழைகள்". என்றவர்,

``திரைப்படத்தை எதிர்க்கும் குழுக்கள் எப்படி வெளியீட்டுக்கு முன்பே படத்தை அணுகுகின்றனர்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"இந்தப் அமைப்புகளும் குழுக்களும் படத்தை வெளியிடுவதற்கு முன்பே, யாரும் அனுமதி வழங்காமல் எப்படிப் பார்க்கிறார்கள்? முழு அமைப்பும் மோசடியானது," என எழுதியுள்ளார்.

"சாதி இல்லை என்றால் நீங்கள் எல்லாம் யார்?"

மற்றொரு பதிவில் சாதியை சுற்றியுள்ள முரண்பாடான கருத்துகள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். "தாடக் 2 திரைப்படத்தின் தணிக்கையின்போது இந்தியாவில் சாதிய அமைப்பை மோடி ஜி ஒழித்துவிட்டார் என்று எங்களிடம் சொன்னார்கள்.

இங்கே சாதிய அமைப்பு இல்லை என்றால், ஏன் பிராமணர்கள் பூலே திரைப்படததின் மீது கோபம்கொள்கின்றனர்? சாதி இல்லை என்றால் நீங்கள் எல்லாம் யார்? ஏன் கோபத்தில் கொதிக்கிறீர்கள்?

சாதிய அமைப்பு இல்லை என்றால் எப்படி ஜோதிராவ் பூலே சாவித்ரிபாய் பூலே இன்னும் பேசுப் பொருளாக இருக்கிறார்கள், இந்தியாவில் சாதி உள்ளதா இல்லையா என்று முடிவு செய்யுங்கள். மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல" என வெளிப்படையாக எழுதியுள்ளார்.

மும்பை: மன்னத் பங்களாவைக் காலி செய்த ஷாருக்கான்; கவலையில் உள்ளூர் வியாபாரிகள்; காரணம் என்ன?

மன்னத் பங்களாபாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பை பாந்திராவில் உள்ள தனது மன்னத் பங்களாவிலிருந்து சமீபத்தில் காலி செய்துவிட்டு அருகில் அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்கு மாடிகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு... மேலும் பார்க்க

Coolie - War 2: `சாரி சாரி, என் தவறுதான்..!’ - ரஜினி குறித்து ஹிருத்திக் ரோஷன் சொன்ன ஃப்ளாஷ்பேக்

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது `கூலி’. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமான வெளியாகிறது. பாலிவுட்டில் அதே நாளில்... மேலும் பார்க்க

Urvashi Rautela: `பத்ரிநாத்தில் எனக்கு கோயில்' - நடிகையின் பேச்சால் மதகுருக்கள் கோபம்; என்ன நடந்தது?

உத்தராகாண்டில் தனது பெயரில் கோவில் இருப்பதாக நடிகை ஊர்வசி ரவுடேலா கூறியதற்கு கடும் எதிர்வினைகள் எழுந்துள்ளன. பத்ரிநாத் பகுதியில் வசிக்கும் மக்கள், சமய அதிகாரிகள் மற்றும் மத குருக்கள் இதற்கு எதிர்ப்பு ... மேலும் பார்க்க

சிக்கந்தர் விமர்சனம்: ராஜா கதையல்ல, ராஜா காலத்து கதை; எல்லா சீனையும் சாமிக்கு விட்டுட்டா எப்டிஜி?

ராஜ்கோட்டின் கடைசி மகாராஜாவாக இருக்கிறார் மக்களால் 'சிக்கந்தர்' என்றழைக்கப்படும் சஞ்சய் (சல்மான் கான்). அவருடைய மனைவியாக அன்பு மழையைப் பொழிகிறார் ராணி சாய்ஶ்ரீ (ராஷ்மிகா மந்தனா).அமைச்சர் ராகேஷின் (சத்... மேலும் பார்க்க

சிக்கந்தர் : 'இந்தப் படத்தில் பணியாற்றியது கனவு போல் இருக்கிறது' - நெகிழும் சந்தோஷ் நாராயணன்

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'சிக்கந்தர்'. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் சி... மேலும் பார்க்க

`ஒரு பாட்டில் ரூ.6300' - நடிப்பு, கிரிக்கெட்டை தொடர்ந்து மது விற்பனையிலும் ஷாருக்கான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திரைப்படங்களில் நடிப்பதோடு படங்களை தயாரிப்பது, ஐ.பி.எல். கிரிக்கெட் என பல தொழில்களை செய்து வருகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் தொழில்கள் அனைத்துமே வெற்றிகரமாக அமைந்து வருகிறது.... மேலும் பார்க்க