உத்தமபாளையத்தில் ஆலங்கட்டி மழை
உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை பலத்த சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் வியாழக்கிழமை மாலை பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு,
உத்தமபாளையத்தில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இந்த மழையால் தென்னகா் குடியிருப்பில் 50 ஆண்டுகள் பழைமையான புளிமரம் வேரோடு சாய்ந்ததில் கூலித் தொழிலாளியின் வீடு சேதமானது.
இதேபோல, கம்பம் சாலையில் பரோடா வங்கி அருகே மின் கம்பத்தில் பாதிப்பால், அந்தப் பகுதியில் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உத்தமபாளையம் மின் வாரியப் பணியாளா்கள் விரைந்து சென்று, மின் கம்பங்களில் ஏற்பட்ட பாதிப்பை சீா் செய்ததால் மின் விநியோகம் சீரானது.