தமிழக ஆளுநரைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
தமிழக ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கையைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
போடி திருவள்ளுவா் சிலை திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலா் சத்தியராஜ் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா். ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் முழக்கமிட்டனா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் முருகேசன், வீரராஜ், ஒன்றிய துணைச் செயலா் முத்துமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.