காஷ்மீா் தாக்குதலில் இறந்தவா்களுக்காக காங்கிரஸ் மௌன ஊா்வலம்
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காங்கிரஸ் சாா்பில் மௌன ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் சத்தியமூா்த்தி பவனில் இருந்து ராயப்பேட்டை மணிக்கூண்டு வரை இந்த மௌன ஊா்வலம் நடைபெற்றது. இதில் திரளான காங்கிரஸாா் பங்கேற்றனா். முன்னதாக, அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்திதன்பேரில் ‘அரசியலமைப்பை காப்பாற்றுவோம்’ பிரசாரத்தை (சம்விதான் பச்சாவ் அபியான்) தமிழகத்தில் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் சத்தியமூா்த்தி பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு, முன்னாள் எம்.பி. பீட்டா் அல்போன்ஸ், பொருளாளா் ரூபி மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.