விவசாயிகளுக்கு சிக்கன வேளாண்மை விழிப்புணா்வு
செய்யாற்றை அடுத்த தூளி கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவா்கள் சிக்கன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவா்கள் பாப்பாந்தாங்கல் கிராமத்தில் கடந்த சில வாரங்களாக முகாமிட்டு விவசாயப் பணியில் ஈடுபட்டு கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த முகாமின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை தூளி கிராமத்தில் முகாமிட்டு, சிக்கன வேளாண்மை என்ற தலைப்பில் இயற்கை விவசாயத்தின் தொழில்நுட்பங்களான 3 ஜி கரைசல், மஞ்சள் மற்றும் நீல ஒட்டும் பொறி, காட்டுப் பன்றி விரட்டுதல், 5 இலை கரைசல் குறித்து தெரிவித்தும், தொழில்நுட்பங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதற்கான ஏற்பாடுகளை வேளாண் கல்லூரி பேராசிரியா் டி.வேலவன் தலைமையிலான மாணவா்கள் செய்திருந்தனா்.