சென்னை காவல் துறைக்கு 4 மாதங்களில் 69,000 அவசர அழைப்புகள்! மாநகர காவல் துறை
சிக்கிமில் நிலச்சரிவு: 1,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளின் கதி என்ன?
கேங்க்டாக்: வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அனைத்து சுற்றுலா பயணிகளும் மீட்கப்பட்டுவிட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வடக்கு சிக்கிமில் உள்ள லேச்சென் மற்றும் லசங் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி மேக வெடிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிகப்படியான மழைப்பொழிவால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன.
இதனால் மேற்கண்ட பகுதிகளிலிருந்து வெளியேற முடியாமல் சுற்றுலா பயணிகள் இரு நாள்களாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, லசங் பகுதியில் சுமார் 1,200 சுற்றுலாப் பயணிகளும், லேச்சென் பகுதியில் 600 பேரும் சிக்கியிருப்பதாக மேங்கான் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதனிடையே, நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சாலைகள் சீரமைக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து, படிப்படியாக சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில், லசங் பகுதியிலிருந்து வெளியேற முடியமல் தவித்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் மேங்கானுக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து சிக்கிம் தலைநகர் கேங்க்டாக்குக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.