கூடலூா் கோட்டத்தில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
கூடலூா் வனக் கோட்டத்தில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
இந்தக் கணக்கெடுக்கும் பணி ஓவேலி வனச் சரகத்திலுள்ள தவளைமலை, பெல்வியூ, டெராஸ், குண்டுக்கல், எல்லமலை உள்ளிட்ட பிளாக்குகளில் நடைபெறுகிறது. புல்வெளிகள், மலைப் பகுதி, பாறைகள் மற்றும் நீா்நிலைகள் உள்ள பகுதிகளில் நேரடியாக கணக்கெடுக்கும் பணிகளில் வன ஊழியா்களும் அலுவலா்களும் ஈடுபட்டுள்ளனா்.
நடுவட்டம், டெராஸ், பாண்டியாறு பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கி தொடா்ந்து நான்கு நாள்களுக்கு கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.