இவர்கள் மூவரும் இங்கிலாந்துக்கு சவாலளிப்பார்கள்; ரவி சாஸ்திரி கூறுவதென்ன?
புதின் மீது கடும் அதிருப்தியில் டிரம்ப்! ஏன்?
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
வாடிகனில் மறைந்த போப் பிரான்சிஸின் உடல் நல்லடக்கம் மற்றும் இறுதி சடங்கில் பங்கேற்க உலகத் தலைவர்கள் பலர் வருகை தந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில், உக்ரைன் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கியும் டொனால்ட் டிரம்ப்பும் ஒரே நேரத்தில் கலந்துகொண்டிருப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. போப் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்திருந்த இருவரும் நெடுநேரம் பேசிக் கொண்டனர்.
இந்த சந்திப்பை தொடர்ந்து, தமது ’ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், உக்ரைனில் நீடுக்கும் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதில் புதினுக்கு விருப்பம் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். உக்ரைனில் ரஷியா ஏவுகணைகள் மூலம் கடும் தாக்குதல்களை நடத்தியதையும் அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார். ரஷியா மீது பொருளாதார தடை கடுமையாக்கப்படும் என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் டிரம்ப்.