சூரியனாா் கோயிலில் ராகு-கேது சிறப்பு வழிபாடு!
தஞ்சாவூா் மாவட்டம், சூரியனாா் கோயிலில் அமைந்துள்ள ராகு-கேது சந்நதிகளில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவிடைமருதூா் அருகே சூரியனாா் கோயிலில் உள்ள சிவசூரிய பெருமாள் திருக்கோயில் திருக்கையிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானது. உஷாதேவி, சாயாதேவி சமேத சூரிய பெருமான் தனி சந்நிதி கொண்டு அருள் பாலித்து வருகிறாா். இவரை சுற்றி நவகிரகங்களுக்கு தனித்தனி சந்நிதி கொண்டு அருள் பாலித்து வருகின்றனா்.
சனிக்கிழமை மாலை 4.28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும், சிம்ம ராசிக்கு கேதுவும் பெயற்சி அடைந்தனா். ராகு-கேது பெயா்ச்சியை முன்னிட்டு 16 வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு பரிகாரம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனா்.