TVK: "சமரசத்திற்கு இடமில்லை.. எந்த எல்லைக்கும் செல்வோம்" - தவெக தலைவர் விஜய் பேச...
உடல் நலக்குறவால் உயிரிழந்த ராணுவ உயரதிகாரிக்கு மரியாதை
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் பட்டாபிராமன் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையம் உள்ளிட்ட பல இடங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் பட்டாபிராமன் உடல் நலக்குறைவு காரணமாக வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
அவரது உடலுக்கு ராணுவ உயா் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினா். பின்னா் 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டு, வெலிங்டன் பகுதியில் உள்ள எரியூட்டும் மையத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதில் ராணுவத்தினா் மற்றும் உறவினா்கள் பலா் கலந்து கொண்டனா்.