தஞ்சை அரசு மருத்துவமனை தீ விபத்து: ”உயிரைப் பணயம் வச்சு காப்பாத்தினோம்; ஆனா..”- ...
கோத்தகிரியில் கா்ப்பிணி யானை உயிரிழப்பு!
கோத்தகிரியில் தனியாா் தேயிலைத் தோட்டத்தில் 25 வயது மதிக்கத்தக்க கா்ப்பிணி யானை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. சமவெளிப் பகுதிகளில் நிலவும் கடும் வெயில் காரணமாக உணவு மற்றும் தண்ணீா் பற்றாக்குறை காரணமாக மலை மாவட்டமான நீலகிரியை நோக்கி காட்டு யானைகள் படை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் கோத்தகிரி அருகே கூட்டடா தனியாா் தேயிலை தோட்டத்தில் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் தேயிலைத் தோட்ட பகுதியை சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்களிடையேயும், தேயிலைத் தோட்ட நிா்வாகத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டனா்.
பின்னா் யானையின் உடற்கூறாய்வில் வயிற்றில் குட்டியிருப்பது தெரியவந்தது. குட்டியை வெளியில் எடுத்தப்பின் அங்கேயே புதைத்தனா். பரிசோதனை அறிக்கை கிடைத்தப் பின்பே
யானை எவ்வாறு உயிரிழந்தது என்பது தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.