செய்திகள் :

மகாராஷ்டிரம்: திருமண நிகழ்வில் மகளை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற சிஆர்பிஎஃப் அதிகாரி

post image

மகாராஷ்டிரத்தில் திருமண நிகழ்வின்போது மகளை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற சிஆர்பிஎஃப் அதிகாரியால் பரபரப்பு நிலவியது.

மகாராஷ்டிர மாநிலம், சோப்டா வட்டத்தில் சனிக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சியில் திரிப்தி-அவினாஷ் தம்பதியும் பங்கேற்றிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஓய்வுபெற்ற சிஆர்பிஎஃப் அதிகாரி கிரண் மாங்கிள்(50) தனது மகள் திரிப்தியைக் சுட்டுக்கொன்றார்.

மேலும் இந்த சம்பவத்தில் அவரது கணவர் அவினாஷும் பலத்த காயமடைந்தார்.

இதுகுறித்து ஜல்கானின் போலீஸ் அதிகாரி கூறுகையில், "தம்பதியர் அங்கு இருப்பதை அறிந்ததும் கிரண் திருமண மண்டபத்திற்கு வந்தார். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, அருகிலுள்ள மக்கள் கிரணை கீழே தள்ளி அவரைத் தாக்கினர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோதனைகளை சாதனைகளாக மாற்றக்கூடியவர் முதல்வர் ஸ்டாலின்: கி. வீரமணி

கிரண் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிரணின் செயலுக்கு என்ன காரணம் என்பது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார். திரிப்தி-அவினாஷ் தம்பதிக்கு ஒரு ஆண்டு முன்பு திருமணம் நடந்த நிலையில் அவர்கள் புணேவில் வசித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளிக்கும் ராணுவம்!

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக ரஜெளரி உள்ளூர் மக்களுக்கு ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளில் இருந்து காத்துக்கொள்வதற்கும், அவர்களுக்கு எதிராகச் செயல்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: அவதூறு கருத்து கூறிய 16 பேர் கைது!

பஹல்காம் தாக்குதல் குறித்து அவதூறு கருத்துக் கூறிய 16 பேரை அஸ்ஸாம் காவல் துறையினர் இன்று (ஏப். 27) கைது செய்துள்ளனர். நேற்று மாலை வரையிலும் 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று 16 பேர் கைதாகியுள்ள... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ விசாரணைக்கு உதவிய விடியோ! எடுத்தவர் யார்?

பஹல்காம் தாக்குதலில் புகைப்படக்காரர் எடுத்த விடியோ, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உதவிகரமாக அமைந்துள்ளது. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து, மரத்தின்மீது ஏறி மறைந்துகொண்ட புகைப்படக்காரர், முழு ... மேலும் பார்க்க

ஏப். 29, 30 தேதிகளில் ரே பரேலி, அமேதி செல்லும் ராகுல்!

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி செல்லவுள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் முதல்முறையாக உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்கு, ஏப்ரல் 30 ஆம் தேதியில் மக்களவை... மேலும் பார்க்க

பைக் - வேன் மோதல்; 11 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் பைக் மீது வேன் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்ததால் பயணிகள் பலியாகினர்.மத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சௌர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையில் 13 பயணிகளுடன் செ... மேலும் பார்க்க

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மணிப்பூரில் ரோந்துப் பணியின்போது மூன்று மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க