செய்திகள் :

இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

post image

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வந்த இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

ராயன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்தப் படத்துக்கு அடுத்து இட்லி கடை எனப் பெயரிடப்பட்ட படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் நாயகியாக நித்யா மெனன் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் ராஜ் கிரண், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இட்லி கடை முதலில் ஏப். 10ஆம் தேதி வெளியாக இருந்தது. பின்னர், படத்தின் வெளியீட்டை அக். 1ஆம் தேதிக்கு தனுஷ் மாற்றினார்.

சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர்கள் பார்த்திபன், சத்யராஜ், அருண் விஜய் உள்ளிட்டோர் பாங்காக் சென்றிருந்தனர்.

இந்நிலையில், படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

பீனிக்ஸ் - வீழான் வெளியீட்டுத் தேதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்த பீனிக்ஸ் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் சேதுபதி, மகாராஜா திரைபடத்தில் ந... மேலும் பார்க்க

நாகநாதசுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்!

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோயிலில் ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அர... மேலும் பார்க்க

ரெட்ரோவுடன் மோதலா? நானி கூறியதென்ன?

சூர்யாவின் ரெட்ரோ, நானியின் ஹிட் 3 ஒரேநாளில் வெளியாகுவது குறித்த கேள்விக்கு தன்னடக்கமானப் பதிலை நானி அளித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்துள்ள காதல் கலந்த ஆக்‌ஷன்... மேலும் பார்க்க

இன்று நல்ல நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.26 ஏப்ரல் 2025 (சனிக்கிழமை)மேஷம்: கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தி... மேலும் பார்க்க

அட்லெடிகோ மாட்ரிட் வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் 3-0 கோல் கணக்கில் ராயோ வல்கேனோவை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. மாட்ரிட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட்டுக்காக அலெக... மேலும் பார்க்க