செய்திகள் :

ரெட்ரோவுடன் மோதலா? நானி கூறியதென்ன?

post image

சூர்யாவின் ரெட்ரோ, நானியின் ஹிட் 3 ஒரேநாளில் வெளியாகுவது குறித்த கேள்விக்கு தன்னடக்கமானப் பதிலை நானி அளித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்துள்ள காதல் கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள ரெட்ரோ மே.1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

அதே தேதியில் சைலேஷ் கொலானு இயக்கத்தில் நடிகர் நானியின் ஹிட் 3 படமும் வெளியாகவிருக்கிறது. அதனால், இரண்டு படங்களுக்கும் போட்டியா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த கேள்விக்கு நடிகர் நானி கூறியதாவது:

போட்டி அல்ல பார்ட்டி

இது நிச்சயமாகப் போட்டி கிடையாது, ஆனால் ரசிகர்களுக்கு பார்டியாக (கொண்டாட்டம்) இருக்கும். நாம் திரையரங்கிற்கு படங்களைக் கொண்டாட வருகிறோம். ரசிகர்களுக்கு இந்தாண்டு சிறப்பாக இருக்கிறது.

தமிழ் மக்களுக்கு ரெட்ரோ முதன்மையான தேர்வாக இருக்கும். சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் மீது அதிகமான அன்பும் அவர்களது படங்கள் மீது மதிப்பு இருக்கின்றன. சந்தோஷ் நாராயணன் இசை வேறு. நிச்சயமாக ஒரு அற்புதத்தை நிகழ்த்தியிருப்பார்கள் என நம்புகிறேன்.

ரெட்ரோ படம் பார்த்துவிட்டு ஹிட் 3 வந்தீர்களானால், நிச்சயமாக நல்ல அனுபவத்தை அளிப்போம் என உறுதி அளிக்கிறேன்.

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் மே.1ஆம் தேதி வெளியாகும் இந்தியா முழுவதும் வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார்.

விஜய் சேதுபதியின் புதிய பட பெயர் இதுவா?

நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் பூரி ஜெகன்நாத் கூட்டணி படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பா... மேலும் பார்க்க

எல் - கிளாசிக்கோ: ஷ்பானிஷ் கோப்பையை வெல்லப்போவது யார்?

ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் இன்றிரவு (1.30 மணிக்கு) மோதுகிறது.பயிற்சியாளர் ஹன்சி பிளிக் தலைமையில் இந்தாண்டில் தொடக்கத்தில் பார்சிலோனா அணி தனது பரம எதிரியான ரியல் மாட்... மேலும் பார்க்க

பீனிக்ஸ் - வீழான் வெளியீட்டுத் தேதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்த பீனிக்ஸ் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் சேதுபதி, மகாராஜா திரைபடத்தில் ந... மேலும் பார்க்க

நாகநாதசுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்!

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோயிலில் ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அர... மேலும் பார்க்க

இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வந்த இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. ராயன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் கலவைய... மேலும் பார்க்க

இன்று நல்ல நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.26 ஏப்ரல் 2025 (சனிக்கிழமை)மேஷம்: கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தி... மேலும் பார்க்க