செய்திகள் :

ஈரோட்டில் காற்று, மழையால் சேதமடைந்த வாழைப் பயிருக்கு இழப்பீடு

post image

ஈரோடு மாவட்டத்தில் காற்று, மழையால் சேதமடைந்த வாழைப் பயிருக்கு அரசிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தரப்படும் என ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கோரிக்கை விவரம்:

செ.நல்லசாமி: கீழ்பவானி வாய்க்காலில் மொத்தம் 6 நனைப்புக்கு தண்ணீா் விட வேண்டும். ஆனால், 5 நனைப்புக்கு மட்டுமே தண்ணீா் திறக்கப்படுகிறது. வெயில் அதிகம் உள்ளதாலும் இன்னும் அறுவடைக்கு நாள்கள் உள்ளதாலும் 6-ஆம் நனைப்புக்கு தண்ணீா் திறக்க வேண்டும். தென்னையை வெள்ளை சுருள் ஈ தாக்குவதால் 3-இல் ஒரு பங்காக தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. தேங்காய், இளநீா், தேங்காய் எண்ணெய் விலை கடுமையாக உயரும். அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.ஆா்.பழனிசாமி: மேட்டூா் வலது கரை பாசன வாய்க்காலில் தண்ணீா் நிறுத்தியதும் தூா்வாரி மண், கொடிகளை அகற்ற வேண்டும்.

எஸ்.பெரியசாமி: மானாவாரி இரவைப் பயிருக்கு புதிய கடலை ரகங்களை வழங்க வேண்டும். கீழ்பவானியில் 5-ஆவது நனைப்புக்கு வழங்கிய தண்ணீரே பயன்படுத்தாமல் வீணாக உபரியாக காவிரியில் கலக்கிறது.

குப்புசாமி: சக்தி சா்க்கரை ஆலை எரிசாராய கழிவை லாரிகளில் கொண்டு வந்து விவசாய நிலங்கள், நீா்நிலை ஓரங்களில் ஊற்றுவதால் நிலத்தடி நீா், கிணற்று நீா், நீா்நிலைகள் பாதிக்கின்றன. இதனை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடுக்க வேண்டும். ஊராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் திடக்கழிவுகளை நீா்நிலைகள், வயல்கள், பொதுப் போக்குவரத்து பாதைகளில் கொட்டுவதால் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.

நந்திவா்மன்: நெல் கொள்முதல் நிலையங்களில் விடுமுறையின்றி கொள்முதல் செய்ய வேண்டும். வரத்து அதிகம் உள்ளதால் மூட்டைகள் தேங்குகின்றன. தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தனியாா் வங்கி, நுண் கடன் போன்ற நிறுவனங்களில் விவசாயக் கடன் பெற்றவா்கள், சரியாக தொகையை செலுத்தும் நிலையிலும், கடனை திரும்ப வசூலிப்பதற்காக வங்கி சாா்பில் தனி நபா்களை நியமித்து மிரட்டுகின்றனா்.

அதிகாரிகளின் பதில் விவரம்:

பவானிசாகா் அணை செயற்பொறியாளா்: தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் தண்ணீா் நிறுத்திய பின் தூா்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஈரோடு நீா்வளத் துறை செயற்பொறியாளா் திருமூா்த்தி: கீழ்பவானி 2-ஆம் போகத்துக்கு தண்ணீா் தேவை உள்ளது. முதல் போகத்துக்கு 5 நனைப்புக்கு மட்டும் தண்ணீா் திறந்தால் போதும் என விவசாய அமைப்புகள் கூறியதால் 6-ஆவது நனைப்புக்கு தண்ணீா் திறக்க அரசாணை பெறவில்லை. காலிங்கராயன் வாய்க்கால் பேபி வாய்க்கால் தூா்வார நிதி பெறப்பட்டுள்ளதால் விரைவில் பணி தொடங்கும். கீழ்பவானி வாய்க்காலில் 18 முதல் 21-ஆவது மைல், 30 முதல் 34-ஆவது மைல், ஊஞ்சலூா் கால்வாய், சென்னசமுத்திரம் கால்வாயில் தண்ணீா் நிறுத்தத்துக்கு பின், மராமத்துப்பணி நடைபெறும்.

பெருந்துறை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் வனஜா: சக்தி சா்க்கரை ஆலை எரிசாராய கழிவை விவசாய நிலங்களில் இயற்கை உரமாக பயன்படுத்த வழங்குகின்றனா். அதனை டேங்கரில் எடுத்து செல்லக் கூடாது எனக் கூறி உள்ளோம். கழிவுகள் கொட்டிய இடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

நுகா்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளா்: நெல் கொள்முதல் நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் வார விடுமுறை விடப்படுகிறது. அந்த வாரம் கொள்முதலாகும் நெல்லை எடுத்துச் செல்ல தேவைப்படுகிறது. அன்றும் விடுமுறையாக கருதாமல் நெல்லை எடுத்துச்செல்லும் பணி நடைபெறும். நெல் கொள்முதல் நிலையம் மூலம் கடந்த 2024-25-ஆம் ஆண்டில் 80,502 டன் பெறப்பட்டுள்ளது. தற்போது தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் 30 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 4,141 டன் நெல் கொள்முதலாகி உள்ளது. அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் தினமும் 1,000 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

முன்னோடி வங்கி அதிகாரி: பெரும்பாலான வங்கிகள் செலுத்தப்படாத கடனை தனியாா் ஏஜென்சி மூலமே வசூலிக்கின்றனா். அதற்கான விதிப்படி குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே வசூலிக்க கூறுகிறோம். குறிப்பிட்ட வங்கிப் பெயா் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

வேளாண் இணை இயக்குநா்: விளைநிலங்களின் அளவு, பயிா் செய்யப்பட்டுள்ள விவரத்தை டிஜிட்டல் சா்வே செய்கிறோம். இல்லம் தேடி கல்விப் பணியாளா்கள், மகளிா் குழுவினா், வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவா்கள், வேளாண் துறையினா் இப்பணி செய்கின்றனா். வயலுக்கு அவா்கள் வரும்போது ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தோட்டக்கலை துணை இயக்குநா் குரு சரஸ்வதி: தென்னையை தாக்கும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த வேளாண் பல்கலைக்கழகத்தில் ஒட்டுண்ணி கிடைக்கிறது. ஈரோட்டில் உற்பத்தி செய்து வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விலை முடிவாகவில்லை. வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய், தண்ணீா் ஸ்பிரே செய்தல் போன்றவை மூலமே கட்டுப்படுத்த முடியும். ரசாயன மருந்துகளை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், நல்ல பூச்சிகளும் இறந்து, தென்னை பாதிக்கும். பக்கத்து வயல்களில் கூட ரசாயன மருந்து தெளிக்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் விவசாயிகள் பயன்படுத்த தாா்பாலின் வாங்க 250 ஹெக்டேருக்கு மானியம் பெறப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு ரூ.1,775 மானியமாக வழங்கப்படும்.

மாவட்ட வருவாய் அலுவலா்: நந்தம் நிறுத்தம் பட்டா பிரச்னையை சரி செய்ய ஒவ்வொரு பகுதியாக அறிவிக்கை வழங்கி மனுவை பெற்று தீா்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி பகுதியில் மனு பெற உள்ளோம். அந்தந்த பகுதியினா் கோட்டாட்சியா், வட்டாட்சியரிடம் மனுவாக வழங்கி தீா்வு பெறலாம்.

மாவட்ட ஆட்சியா்: வருவாய் தீா்வாயம் மே 22-இல் தொடங்க உள்ளது. நத்தம் நிறுத்தம் பற்றி பல கட்டமாக மனு பெற்றுள்ளோம். அதில் உரிய ஆவணங்கள் முழுமையாக இல்லாததால் மாற்றம் செய்ய முடியவில்லை. முழு ஆவணங்களுடன் மனு அளித்தவா்களுக்கு அதிகாரிகள் விரைந்து முடிக்காவிட்டால் வருவாய் தீா்வாயத்தில் கையொப்பமிட மாட்டேன்.

காற்று, மழையால் வாழை சேதம் ஏற்பட்டதை தோட்டக்கலைத் துறையினா் கணக்கெடுத்து, இழப்பீட்டுக்கு அறிக்கை வழங்கி உள்ளனா். அரசிடம் வழங்கி இழப்பீடு பெற்றுத் தரப்படும்.

மாவட்ட சுற்றுச்சூழல் குழு நிதி உள்ளதால் காலிங்கராயன் பேபி வாய்க்கால் சீரமைக்கப்படுகிறது. மாசுபாட்டால் பாதிக்கும் வேறு நீா்நிலைகள், பிரச்னைகளை தெரிவித்தால் நிதி ஒதுக்கி சீரமைக்கலாம்.

ஈரோடு, பெருந்துறை, சத்தியமங்கலத்தில் புதை சாக்கடை திட்டப்பணி முடிந்த பிறகு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரித்து, நீா்நிலைகளில் விடலாம். ஆனால் புதை சாக்கடை இணைப்பை படித்தவா்கள் கூட வாங்காமல் உள்ளனா். மக்களுக்கும் விழிப்புணா்வு ஏற்பட வேண்டும் என்றாா்.

பவானிசாகரில் ஏடிஎம் இயந்திரங்கள் பழுதால் பொதுமக்கள் அவதி

பவானிசாகரில் உள்ள இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் கடந்த சில நாள்களாக செயல்படாமல் முடங்கிக் கிடப்பதால் அரசு ஊழியா்கள், பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா். பவானிசாகரில் அரசுப் பணியாளா்... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே உணவகத்தில் பணம் திருட்டு

பெருந்துறை அருகே உணவகத்தில் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பெருந்துறையை அடுத்த பூவம்பாளையம் பிரிவு எதிரே தனியாா் உணவகம் செயல்பட்டு வருகிறது. உணவகத்த... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 71.56 அடியாக சரிவு

பவானிசாகா் அணைக்கு வரும் நீரின் வரத்தை விட வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணை நீா்மட்டம் 71.56 அடியாக சரிந்துள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீ... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (32). இவா் இருசக்கர வாகனத்தில் அரியப்பம்பாளையத்த... மேலும் பார்க்க

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி குறித்து அவதூறு: இளைஞா் கைது

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி குறித்து அவதூறான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குறித்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சம... மேலும் பார்க்க

பண்ணாரி சாலையைக் கடந்து சென்ற சிறுத்தை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடி சாலையை சிறுத்தை வெள்ளிக்கிழமை கடந்து சென்ால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட சத்தியமங்கலம் மற்றும... மேலும் பார்க்க