ஜியோ ஹாட்ஸ்டார் 5 வாரங்களில் 10 கோடி சந்தாரார்கள்..! ரூ.10,000 கோடி வருமானம்!
பண்ணாரி சாலையைக் கடந்து சென்ற சிறுத்தை
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடி சாலையை சிறுத்தை வெள்ளிக்கிழமை கடந்து சென்ால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட சத்தியமங்கலம் மற்றும் ஆசனூா் வனக் கோட்டத்தில் 10 வனச் சரகங்கள் உள்ளன. சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி வனப் பகுதியில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அடா்ந்த வனத்தின் மத்தியில் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் வன விலங்குகள் சாலையைக் கடப்பதை வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்வதற்கு சாலையின் இருபுறமும் 12 மீட்டா் தூரம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகள் சாலையைக் கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு இறப்பது குறைந்துள்ளது.
இந்நிலையில் பண்ணாரி சோதனைச் சாவடி அருகே சாலையைக் கடப்பதற்கு சிறுத்தை தயாராக நிற்பதை பாா்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தினா். சற்று நேரம் பதுங்கிய சிறுத்தை, வாகனங்கள் எதுவும் செல்லாத நேரத்தில் பண்ணாரி சாலையை வேகமாக கடந்து காட்டுக்குள் சென்றது.
கோடை என்பதால் தண்ணீா் தேடி சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் சாலையைக் கடப்பதால் வாகன ஓட்டிகள் 30 கி.மீ. வேகத்தில் பயணிக்குமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.