செய்திகள் :

தீவிரவாதிகளுக்கு ஆதரவு: ``அமெரிக்காவுக்காக மோசமான வேலையை செய்து வருகிறோம்'' - பாகிஸ்தான் அமைச்சர்!

post image

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் இந்தியாவை அதிர்ச்சியடையச் செய்தது. இந்தத் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என லஷ்கர் இ தொய்பாவும், பாகிஸ்தானும் தெரிவித்திருந்தன. இந்த நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார்.

அமெரிக்கா
அமெரிக்கா

அதில், `` கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கு மற்றும் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்காக பயங்கரவாத அமைப்புகளை ஆதரித்து, பயிற்சி அளித்து, நிதியளிக்கும் மிக மோசமான வேலையை செய்துவருகிறோம்.

சோவியத் நாடுகள்- ஆப்கானிஸ்தான் போரின் போதும், 9/11 க்குப் பிறகு தாலிபானுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரின் போதும் பாகிஸ்தான் மேற்கு நாடுகளுடன் இணைந்திருக்காவிட்டால் பாகிஸ்தானின் கடந்த கால வரலாறு எந்தக் குற்றச்சாட்டுக்கும் இடமில்லாததாக இருந்திருக்கும்" எனக் குறிப்பிட்டார்.

இந்தியா-பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானுடனான எல்லை பிரச்னைக் காரணமாக சோவியத் - ஆப்கானிஸ்தான் போரில் சோவியத்துகளை எதிர்த்துப் போராட ஆயுதமேந்திய போராளிகளுக்கு பயிற்சி அளித்து அடைக்கலம் கொடுத்தது பாகிஸ்தான். இதன் மூலம் பாகிஸ்தான் அமெரிக்காவை ஆதரித்தது. அதனால், அமெரிக்காவிற்கும் சோவியத்துகளுக்கும் இடையிலான மறைமுகப் போர் பாகிஸ்தானுக்கும் முக்கியப் பங்காக இருந்தது. கொடுத்தது.

ஒசாமா பின்லேடனின் அல்-கொய்தாவுக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அடைக்கலம் கொடுத்தனர். செப்டம்பர் 11, 2001 தாக்குதலின் விளைவாக அமெரிக்கா ஆப்கானிஸ்தானின் மீது போர் தொடுத்தது. எனவே, தலிபான்களை வேரோடு அகற்ற வேண்டும் என்ற முடிவோடு அமெரிக்கா தலைமையிலான படைகளை ஆதரிக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தானும் மேற்கொண்டதும் கவனிக்கத்தக்கது.

``போதைப்பொருள் பறிமுதலுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளது..'' - NIA சொல்வதென்ன?

குஜராத்தில் போதைப்பொருள் பறிமுதலுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) போலீஸார் தகவல் தெரிவித்திருக்கின்றனர். குஜராத் கடல் பகுதியில... மேலும் பார்க்க

Doctor Vikatan: திடீரென சம்பந்தமில்லாமல் பேசும் மாமனார்.. சோடியம் குறைந்ததுதான் காரணமா?

Doctor Vikatan: என் மாமனாருக்கு 75 வயதாகிறது. கடந்த வாரம் திடீரென சம்பந்தமில்லாத விஷயங்களைஉளற ஆரம்பித்தார். இது எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. உடலில் சோடியம் அளவு குறைந்தால் இப்படித்தான... மேலும் பார்க்க

Trump: `பாகிஸ்தானுடனும் நான் நெருக்கமாக இருக்கிறேன், அதனால்..' -காஷ்மீர் தாக்குதல் குறித்து டிரம்ப்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தத் தாக்க... மேலும் பார்க்க

மதுரை: `ஜெயலலிதா சிலையை பராமரிக்கணும்' - திமுக மேயர்; `முதல்வருக்கு நன்றி' - எதிர்க்கட்சித் தலைவர்

மதுரையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் பராமரிப்பின்றி இருப்பதாக வருத்தப்பட்டும், திருச்சிக்கு வழங்குவதுபோல் மதுரைக்கும் கவுன்சிலருக்கான நிதியை உயர்த்தித்தர வேண்டுமென்றும் மேயர் இந்திராணி பேசியுள்ளது பரப... மேலும் பார்க்க

8 மணி நேரம், இருட்டு அறை, பகல் தூக்கம், கனவுகள்.. தூக்கம் தொடர்பான சந்தேகங்கள், தீர்வுகள்!

உயிர் வாழ மூச்சுவிடுதல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தூக்கமும். வயது, பொழுது, நேரம், இருட்டான அறை என்று தூக்கத்துக்கான ஒழுக்கங்கள் பல இருக்கின்றன. அவற்றைப்பற்றி விரிவாகச் சொல்கிறார் தூக்கவியல் ... மேலும் பார்க்க

``சமூகத்தை பிளவுபடுத்த நடத்தப்பட்ட தாக்குதல்..'' - காஷ்மீர் முதல்வரை சந்தித்த ராகுல் காந்தி!

ஜம்மு பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் இந்திய சமூகத்தைப் பிரிப்பதற்காக நடத்தப்பட்டது என்றும், இந்த கீழ்த்தரமான செயலை எதிர்த்துப் போராடவும் தீவிரவாதத்தைத் தோற்கடிக்கவும் நாட்டு மக்கள் ஒற்றுமைய... மேலும் பார்க்க