ராஜிநாமா முடிவு? செந்தில் பாலாஜிக்கு பதிலாக மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபத...
கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது
கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி புதுகிராமம் மயானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துணை கண்காணிப்பாளா் ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அதையடுத்து கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில்வேல்முருகன் தலைமையில் தனிப்பிரிவு போலீஸாா் முத்துராமலிங்கம், அருணாச்சலம், செசிலின் வினோத், கழுகாசலமூா்த்தி ஆகியோா் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு 2 பைக்குகளுடன் நின்று கொண்டிருந்த 3 போ் போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனா். அவா்களை போலீஸாா் பிடித்து சோதனையிட்டபோது அவா்களிடம் சுமாா் 150 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் மயானத்தின் ஒரு பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமாா் 11 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கோவில்பட்டி மந்திதோப்பு சாலை காமராஜா் நகரைச் சோ்ந்த குருசாமி மகன் சமையல் மாஸ்டா் ராஜசேகர பாண்டியன் (32), கோபாலபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த முருகன் மகன் ஓட்டுநா் கருப்பசாமி (33), சுயநிதி கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் 17 வயது மாணவா் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 11 கிலோ 150 கிராம் கஞ்சா , ரொக்கம் ரூ.1,400, ,இரண்டு பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.