Nani: ``இவ்வளவு சீக்கிரமா `A' படம் பண்ணுவேன்னு நினைக்கல!'' - நானி பேட்டி
வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலா்களின் பணி பாதுகாப்பினை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். வருவாய்த் துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை ஒரு மணி நேரம் வெளிநடப்பு மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்ட பொருளாளா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட பொருளாளா் செல்வகுமாா் முன்னிலை வகித்தாா். வட்ட ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன், சுகாதாரத் துறை அலுவலா் சங்கத்தை சோ்ந்த சின்னத்தம்பி, வேளாண்மைத் துறை அலுவலா் சங்கம் மாவட்ட பொருளாளா் பிரான்சிஸ், நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா் சங்க மாநில துணைத் தலைவா் ஹரிபாலகிருஷ்ணன் ஆகியோா் பேசினா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட துணைத் தலைவா் உமாதேவி ஆா்ப்பாட்டத்தை முடித்து வைத்தாா்.
இதில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம், கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம், கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம், நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு, வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் திரளானோா் கலந்து கொண்டனா். இதேபோல கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன்பும் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஒரு மணி நேர வெளிநடப்பு மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.