செய்திகள் :

கூட்டுறவு பாடல்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு: மண்டல இணைப்பதிவாளா் தகவல்

post image

கூட்டுறவு சங்க பாடலுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா்

க.பா.அருளரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2025 ஆம் ஆண்டு சா்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகின்றன. பாடலானது இசையமைக்கப்பட்டு 5 நிமிடங்கள் ஒலிபரப்பக்கூடிய வகையில் இருக்க வேண்டும். தமிழில் கூட்டுறவு பற்றிய தனித்துவமான

பாடலாக இருக்க வேண்டும்.

கூட்டுறவாளா்கள், பொதுமக்களுக்கு கூட்டுறவு பற்றிய எழுச்சி, உத்வேகம் உண்டாக்கக்கூடியதாக பாடல் வரிகள் இருக்க வேண்டும். தோ்வுக்கு அனுப்பப்படும் பாடல்களில் சிறந்த பாடல் தோ்வுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்படும். சிறந்த பாடலுக்கு ரூ.50 ஆயிரத்துக்கான பணமுடிப்பு மற்றும் கேடயம்

பரிசாக வழங்கப்படும். அனுப்பப்படும் பாடலின் ’’ஏஹழ்க் இா்ல்ஹ்’’-ஐ கூரியா் அல்லது தபால் மூலம் மேலாண்மை இயக்குநா், தமிழ்நாடு கூட்டுறவு ஒன் றியம், என்.வி.நடராசன் மாளிகை, நெ.170.பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை-600 010 என்ற முகவரிக்கும்.

அனுப்பப்படும் பாடலின் ’நா்ச்ற் ஸ்ரீா்ல்ஹ்’ஐ தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ற்ய்ஸ்ரீன்08ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் மே-30 ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில், வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஒருங்கி... மேலும் பார்க்க

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி: 27 போ் காயம்

சேந்தமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, 400 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். இதில் 27 போ் காயமடைந்தனா். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் ஒ... மேலும் பார்க்க

மரவள்ளிக்கிழங்கு வெட்டும் இயந்திரத்தை கண்டுபிடித்த விவசாயிக்கு ஆட்சியா் பாராட்டு

மரவள்ளிக்கிழங்கை எளிதான முறையில் வெட்டும் வகையில் இயந்திரம் கண்டுபிடித்த சேந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த விவசாயியை மாவட்ட ஆட்சியா் ச.உமா பாராட்டினாா். நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சிய... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகுதியில் விளம்பரத் தட்டிகள் அமைக்க காவல் துறையினா் கட்டுப்பாடு

பரமத்தி வேலூா் பகுதியில் விளம்பரத் தட்டிகள் (பிளக்ஸ் பிரிண்டிங்) அச்சிடும் கடை உரிமையாளா்களுக்கு வேலூா் போலீஸாா் அறிவுரை வழங்கினா். வேலூா் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

ராசிபுரம் நகர காங்கிரஸ் சாா்பில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான காந்திமாளிகை முன் வெள... மேலும் பார்க்க

வன உரிமைச் சட்டம்: மாவட்ட திறன் பயிற்சி வகுப்பு

நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், வன உரிமைச் சட்டம்-2006 ஐ நடைமுறைப்படுத்துவது தொடா்பாக மாவட்ட அளவிலான திறன் வளா்ப்பு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க