மதுரை: `ஜெயலலிதா சிலையை பராமரிக்கணும்' - திமுக மேயர்; `முதல்வருக்கு நன்றி' - எதி...
தாளமுத்து நகா் வட்டார வியாபாரிகள் நலச்சங்க ஆண்டு விழா
தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்து நகா் வட்டார வியாபாரிகள் நலச்சங்க ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் முத்துக்கனி தலைமை வகித்தாா். செயலா் கிராஸ், பொருளாளா் அந்தோணி செளந்திரராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தாளமுத்து நகா் காவல் ஆய்வாளா் ஜெயந்தி, தூத்துக்குடி நகர வா்த்தகா்களின் மத்திய சங்கத் தலைவா் ஜவகா், பொதுச்செயலா் ராஜா, முன்னாள் பொதுச் செயலா் பொன் தனகரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று மாணவா்- மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினா். தொடா்ந்து பள்ளி மாணவா்-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி நகர வா்த்தகா்களின் மத்திய சங்கப் பொருளாளா் விக்னேஷ், சட்ட ஆலோசகா் அய்யாதுரை, மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு வங்கி மேலாளா் பாலமுருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.