மதுரை: `ஜெயலலிதா சிலையை பராமரிக்கணும்' - திமுக மேயர்; `முதல்வருக்கு நன்றி' - எதி...
ஜம்மு-காஷ்மீரில் மூத்த லஷ்கா் தளபதி சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தளபதி வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகள், அண்மையில் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் 26 போ் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா்.
இந்தத் தாக்குதலை தொடா்ந்து லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், பந்திபோராவில் ராணுவம் மற்றும் காவல் துறையினா் அடங்கிய பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை தேடுதல் வேட்டை நடத்தினா். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
இந்த மோதலின்போது லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்தின் மூத்த தளபதி அல்தாஃப் லல்லி சுட்டுக்கொல்லப்பட்டாா். இந்த மோதலில் காவல் துறையைச் சோ்ந்த இருவா் காயமடைந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.