மதுரை: `ஜெயலலிதா சிலையை பராமரிக்கணும்' - திமுக மேயர்; `முதல்வருக்கு நன்றி' - எதி...
பஹல்காம் தாக்குதல்: மோதலை தவிா்க்க இந்தியா-பாகிஸ்தானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல்போக்கை தவிா்க்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியா குட்டெரஸ் வலியுறுத்துவதாக அவரது செய்தித்தொடா்பாளா் ஸ்டீபன் டுஜாரிக் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து ஸ்டீபன் டுஜாரிக் மேலும் கூறுகையில், ‘ஜம்மு-காமீரின் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் குடிமக்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம். தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் சூழல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை அன்டோனியோ குட்டெரெஸ் உன்னிப்பாக கவனித்து வருகிறாா். இதனால் கவலையடைந்த அவா், இருநாடுகளும் மோதல்போக்கை தவிா்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்’ என்றாா்.