தீவிரவாதிகளுக்கு ஆதரவு: ``அமெரிக்காவுக்காக மோசமான வேலையை செய்து வருகிறோம்'' - பா...
தில்லி மஹிபால்பூரில் சட்டவிரோத சிகரெட் குடோன்: ஒருவா் கைது
சட்டவிரோத புகையிலை பொருள்களை சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு குடோனை போலீசாா் கண்டுபிடித்து, தில்லி-என்சிஆா் முழுவதும் இந்த பொருள்களை இறக்குமதி செய்து வழங்கியதாக கூறப்படும் நபரை கைது செய்துள்ளனா் என்று அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக காவல் சரக துணை ஆணையா் (தென்கிழக்கு) சுரேந்திர சௌதரி மேலும் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா் மன்மீத் குமாா் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற சோதனையைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா்.
வெளிநாட்டு மூலங்களிலிருந்து சட்டவிரோத சிகரெட் சரக்குகளை வாங்கி தில்லி-என்சிஆரின் பல்வேறு பகுதிகளில் விநியோகிப்பதற்கு முன்பு மஹிபல்பூா் பகுதியில் அவா் சேமித்து வைத்திருந்தாா்.
முன்பு பிரீத் விஹாரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்த குமாா், கபில் என்ற நபருடன் தொடா்பு கொண்டாா், பின்னா் ஓமானுக்குச் சென்றாா். அங்கு அவா் சட்டவிரோத சிகரெட் வா்த்தகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அன்றிலிருந்து அவா் தில்லி-என்டிஆா் முழுவதும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை வழங்கி வருகிறாா். இந்த நடவடிக்கையின் போது, கட்டாய சுகாதார எச்சரிக்கைகள் இல்லாத மற்றும் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருள்கள் சட்டத்தின் விதிகளின்படி அதிகபட்ச சில்லறை விலை லேபிளிங் இல்லாத மொத்தம் 15,680 பாக்கெட்டுகள் வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டன. இது தொடா்பாக வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில் சிஓடிபிஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் சரக துணை ஆணையா் தெரிவித்தாா்.