மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
Pope Francis: தென் அமெரிக்காவிலிருந்து முதல் போப் டு `Hope’ புத்தகம் | போப் பிரான்சிஸ்
ஜோர்ஜ் மாரியோ பெர்கோக்ளியோ (Jorge Mario Bergoglio) என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ் (Pope Francis) 2013 மார்ச் 13 அன்று, கத்தோலிக்க திருச்சபையின் 266-வது போப்பாகவும், வாட்டிக்கன் நகரத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை
இத்தாலியிலிருந்து அர்ஜென்டீனாவுக்கு குடியேறிய தம்பதி ரெஜினா மரியா சிவோரி - மரியோ ஜோஸ் பெர்கோக்லியோ. இவர்களுக்கு முதல் மகனாக டிசம்பர் 17, 1936, அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பகுதியில் பிறந்தார் போப் பிரான்சிஸ்.
உயர்நிலைப் பள்ளியில் வேதியியல் தொழில்நுட்ப வல்லுநராகப் பயிற்சிப் பெற்ற போப் பிரான்சிஸ், உணவு பதப்படுத்தும் துறையில் சிறிது காலம் பணியாற்றினார்.
நிமோனியா பாதிப்பு:
போப் பிரான்சிஸ்க்கு 21 வயதாக இருந்தபோது, கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவரது வலது நுரையீரலின் ஒரு பகுதியை அகற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதற்குப் பிறகு 1958-ல் ஜேசூயிட் நோவிஷியேட் (Jesuit Novitiate) அதாவது, ஜெசூயிட் சமுதாயத்தில் சேர விரும்பும் ஆண்கள் தொடக்க கட்ட மதபயிற்சி பெரும் பள்ளியில் சேர்ந்தார்.
2 ஆண்டுகள் இந்தப் பயிற்சிக் காலம். இந்தப் பயிற்சியின் முடிவில் ஒருவர் தன்னை கடவுள் சேவைக்கு அர்ப்பணிக்கத் தயார் படுத்திக் கொள்கிறார்.

மதப் பயணம்:
பின்னர் சிலியின் சாண்டியாகோவில் (Santiago de Chile) மனிதநேயம், பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் தத்துவத்தில் (முதுகலைப் பட்டம்) பட்டம் பெற்றார்.
அதற்குப் பிறகுதான் இறையியலில் பட்டம் பெறும் போது உயர்நிலைப் பள்ளியில் இலக்கியம் மற்றும் உளவியலைக் கற்பித்தார். 1969-ல் பாதிரியாராக நியமிக்கப்பட்டார்.
1973 - 79 வரை அர்ஜென்டினாவின் ஜேசுட் மாகாணத்தின் உயர் மட்டத் தலைவராக பணியாற்றினார். 1998-ம் ஆண்டு ப்யூனஸ் ஐர்ஸ் பேராயராக நியமிக்கப்பட்டார் 2001-ம் ஆண்டு கார்டினலாக உயர்த்தப்பட்டார்.
2013 போப்
ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் தலைமைத்துவத்தின் ஒரு புதிய சகாப்தமாக, தென் அமெரிக்காவிலிருந்து முதல் போப்பாக, ஜேசுட் வரிசையில் முதல்வராகவும் முதல் முறையாக மார்ச் 13, 2013-ம் ஆண்டு போப்பாக பதவியேற்றார் போப் பிரான்சிஸ்.
இவரைச் சுற்றி சில சர்ச்சைகள் இருந்தாலும், ஏழைகள், அகதிகள், LGBTQ+ சமூகத்தினருக்கான ஆதரவு, "Laudato Si’" எனும் சுற்றுச்சூழல் குறித்த அறிவுரைகள் முக்கியமானவை. புரிதல் காரணமாக முஸ்லிம், யூத மதத் தலைவர்களுடன் உரையாடினார்.

நூல்கள்
போப் பிரான்சிஸ் Hope என்ற தன் புத்தகத்தில் தனது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். Life: My Story Through History என்ற புத்தகத்தில் தனது வாழ்க்கை வரலாற்றை விரிவாக விவரித்திருக்கிறார்.
மறைவு
இரட்டை நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் கடந்த சில மாதங்களாக சிகிச்சையில் இருந்தார். சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று தன் 88-ம் வயதில் ரோமில் இருக்கும் ஜெமெல்லி மருத்துவமனையில் காலமானார்.

போப் பிரான்சிஸ் பணியில் எளிமை, கருணை, சமூக நீதி ஆகியவற்றை முன்னிறுத்தி, கத்தோலிக்க திருச்சபையின் புதிய பாதையை உருவாக்கி வழிகாண்பித்திருக்கிறார். அவரது மரணம் உலகளவில் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.!