செய்திகள் :

"எக்ஸ்ட்ரா பன்னீர் தரமாட்டீங்களா?" - மண்டபத்திற்குள் பஸ்ஸை விட்டு ஏற்றியவர் கைது; பின்னணி என்ன?

post image

உத்தரப் பிரதேசத்தில் திருமண சாப்பாட்டில் போதிய அளவு பன்னீர் கொடுக்கவில்லை என்பதற்காக ஒருவர் செய்த காரியத்தால் திருமண மண்டபமே ரத்தக்களரியாகிவிட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள ஹமித்பூர் என்ற இடத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ரஞ்சித் சிங் என்பவரின் மகனுக்குத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

திருமணத்திற்கு விருந்தினர்களை அழைத்து வர ஒரு மினி பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த மினி பஸ்ஸைத் தர்மேந்திர யாதவ் என்பவர் ஓட்டினார். அவர் விருந்தினர்கள் அனைவரையும் அழைத்து வந்துவிட்டுச் சாப்பிடுவதற்காக அமர்ந்தார்.

திருமணம்
திருமணம்

சாப்பாட்டில் அவருக்குப் பிடித்தமான பன்னீர் இருந்தது. உடனே கூடுதலாக இரண்டு கரண்டி பன்னீர் போடும்படி தர்மேந்திரா கேட்டார். ஆனால் சாப்பாடு பரிமாறியவர் கூடுதலாகப் பன்னீர் கொடுக்க மறுத்தார்.

இதனால் தர்மேந்திரா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாப்பிட்டு முடித்துவிட்டுச் சென்றபிறகும் தர்மேந்திராவிற்குக் கோபம் குறையவில்லை. அவரால் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்த தர்மேந்திரா மினி பஸ்ஸை ஸ்டார்ட் செய்து திருமண மண்டபத்தின் மீது மோதச் செய்தார். இதில் மாப்பிள்ளையின் தந்தை உட்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

மணமகளின் சித்தப்பாவும் இதில் காயம் அடைந்தார். இச்சம்பவத்தால் சனிக்கிழமை இரவு நடக்க வேண்டிய திருமணம் நின்று போனது. அடுத்த நாள்தான் திருமணம் நடந்தது. இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தர்மேந்திராவைக் கைது செய்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`ஆடி காரில் பால் வியாபாரம்' - ஹரியானாவை ஆச்சர்யத்தில் வியக்க வைத்த இளைஞன்

பிடித்த வேலையை செய்வதற்காக சிலர் அதிக சம்பளத்தில் இருக்கும் வேலையை கூட ராஜினாமா செய்வதுண்டு. அப்படித்தான் ஹரியானாவில் வாலிபர் ஒருவர் தனக்கு பிடித்த வேலையை செய்யவேண்டும் என்பதற்காக வங்கி வேலையை ராஜினாம... மேலும் பார்க்க

காேவை: `வாடிவாசல் வீரர்கள்' - அசரடித்த ஜல்லிக்கட்டு போட்டி

கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்ட... மேலும் பார்க்க

Titanic: மூழ்கும் முன் டைட்டானிக் குறித்து எழுதப்பட்ட கடிதம் ரூ.3 கோடிக்கு ஏலம்; எப்படி கிடைத்தது?

டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட சொகுசு கப்பல் என்றாலே "டைட்டானிக் கப்பல்" தான் நினைவிற்கு... மேலும் பார்க்க

அவசரத்திற்குக் கழிப்பறை பயன்படுத்திய முதியவர்; ரூ.800 வசூலித்த ஹோட்டல்; வைரல் பதிவின் பின்னணி என்ன?

ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், வயதான பெண்மணி, வெறும் ஆறு நிமிடங்கள் கழிப்பறை பயன்படுத்துவதற்காக ரூபாய் 805 வசூலித்த சம்பவம் இணையவாசிகளைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.ராஜஸ்தானில் உள்ள ... மேலும் பார்க்க

`மியான்மரில் மீண்டும் அது நடக்கும்..!’ - மக்களை பீதியடைய செய்த ஜோதிடர் கைது

மியான்மரில் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மீண்டும் இதே போன்று மற்றொரு நிலநடுக்கம் ஏற்படும் என்று கூறி மக்களை பீதியடைய செய்ததாக ஜோதிடர் ஒருவர் கைது செ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச் சடங்கு; வாடிக்கனுக்கு வெளியே நல்லடக்கம் - முழுத் தகவல்

மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு இன்று காலைதொடங்கி நடைபெற்றுவருகிறது. கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி தனது 88 ஆவது வயதில் மறைந்தார். இவர் கடந்த சில மாதங்களாக ... மேலும் பார்க்க