Nani: ``இவ்வளவு சீக்கிரமா `A' படம் பண்ணுவேன்னு நினைக்கல!'' - நானி பேட்டி
பெருந்துறை அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு
பெருந்துறை அருகே சாலையோரமாக நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த நாவல்பட்டி, காட்டூரைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சதீஷ்குமாா் (32), லாரி ஓட்டுநா். இவா் வாழப்பாடியில் இருந்து சிமென்ட் பாரம் ஏற்றிக் கொண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி கோவை நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகில் சாலையோரமாக நின்றிருந்த லாரியின் பின்னால் சதீஷ்குமாா் ஓட்டிச் சென்ற லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த சதீஷ்குமாரை அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.