போல்ட் 4 விக்கெட்டுகள், கிளாசன் அதிரடியால் மீண்ட சன்ரைசர்ஸ்: மும்பைக்கு 144 ரன்க...
Sleeping Prince: 20 ஆண்டுகளாகத் தூங்குகிறாரா சவுதி இளவரசர்? வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன?
Sleeping Prince என்று பரவலாக அறியப்படும் சவுதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலால்.
இவர் ராணுவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, 2005-ம் ஆண்டு ஒரு சாலை விபத்தைச் சந்தித்து கோமா நிலைக்குச் சென்றார்.
ரியாத்தில் உள்ள கிங் அப்துல் அஜிஸ் மருத்துவ நகரில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இருபது வருடங்களாக வென்டிலேட்டர் உதவியுடன் வாழ்ந்துவரும் இளவரசருக்கு உணவு குழாய் மூலம் உணவளிக்கப்படுகிறது.
2019-ம் ஆண்டில், அவர் ஒரு விரலைத் தூக்குவது, தலையை அசைப்பது போன்ற சிறிய அறிகுறிகள் தெரிந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் இந்த சைகைகள் அவர் முழு சுயநினைவுக்குத் திரும்புவதைக் குறிக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும், அவருக்குச் சிகிச்சையை நிறுத்தி கருணைக் கொலை செய்வதற்கும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியிருக்கின்றனர்.
ஆனால், அவரது தந்தை இளவரசர் கலீத் பின் தலால் அல் சவுத், ``கடவுள் என் மகன் விபத்தில் இறக்க வேண்டும் என்று விரும்பியிருந்தால், இந்நேரம் அவர் கல்லறையிலிருந்திருப்பார்.
அவர் உயிரோடு இருக்கிறார் என்றால் கடவுள் அவரை வாழ வைக்கவே விரும்புகிறார். அவர் மீண்டு வருவார்" என நம்பிக்கையோடு தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், தற்போதுவரை கோமாவில் இருக்கும் இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலாலுக்கு கடந்த 18-ம் தேதி 36 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு 'தூங்கும் இளவரசர்' என்று அவரது புகைப்படங்கள் மீண்டும் வைரலாகியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs