ஸ்பானிஷ் கோப்பையை வென்றது பார்சிலோனா..! இதுதான் எல் கிளாசிக்கோ!
மின்னணு முறையில் பயிா் சாகுபடி கணக்கெடுப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் நிகழாண்டில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோடை பயிா்களை மின்னணு முறையில் கணக்கெடுத்து பதிவு செய்யும் பணி தொடங்கியது.
பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலக கூட்டரங்கில் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநா் பாா்த்தசாரதி தலைமையில் இதற்காக பயிற்சியளிக்கப்பட்டது.
இதை வேளாண்மை அலுவலா் அனிதா, துணை வேளாண்மை அலுவலா் ராஜ்குமாா் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா் காா்முகிலன் ஆகியோா் முன்னின்று நடத்தினா்.
தொடா்ந்து, செட்டிபாளையத்தில் நெல் வயல்களில் மின்னணு பயிா் சாகுபடி கணக்கெடுப்பு தொடா்பாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
பண்ருட்டி வட்டாரத்தில் நிகழாண்டு கோடை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 39 வருவாய் கிராமங்களிலும் இந்தப் பணியை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குநா் பாா்த்தசாரதி தெரிவித்தாா்.