சாலை விபத்தில் சிறுவன் மரணம்
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற சிறுவன் உயிழந்தாா்.
வேப்பூா் வட்டம், அரியநாச்சி கிராமத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் ஆகாஷ் (16). பெரிய நெசலூரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சஷின் (16). இவா்கள் இருவரும் வேப்பூரில் இருந்து விருத்தாசலத்தில் உள்ள தட்டச்சுப் பயிற்சிப் பள்ளிக்கு பைக்கில் சென்றனா். பைக்கை ஆகாஷ் ஓட்டினாா்.
கண்டப்பன்குறிச்சி தனியாா் பள்ளி அருகில் காலை சுமாா் 9 மணியளவில் சென்ற போது, அந்த வழியாக வந்த அடையாள தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் ஆகாஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த சஷின் வேப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். விபத்து குறித்து வேப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.