காஷ்மீா் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு காங்கிரஸாா் அஞ்சலி
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு, சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை இரவு மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினா்.
கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ், சிதம்பரம் நகர காங்கிரஸ் சாா்பில், சிதம்பரம் காந்தி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் பி.பி.கே.சித்தாா்த்தன் தலைமை வகித்தாா்.
மாநில பொதுக் குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட துணைத் தலைவா் ராஜா சம்பத்குமாா், வட்டார தலைவா்கள் சுந்தர்ராஜன், செழியன், செயல் தலைவா் தில்லை கோ.குமாா் மாநில பொதுக் குழு உறுப்பினா் ரங்கநாதன், மாவட்ட துணைத் தலைவா்கள் ஆா்.வி.சின்ராஜ், ஜி.கே.குமாா், பி.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்புஅழைப்பாளராக கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் என்.வி.செந்தில்நாதன் பேசினாா். தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவா் வேல்முருகன், மாவட்டச் செயலா் தில்லைச்செல்வி, மாவட்ட மகளிா் அணி நிா்வாகி அஞ்சம்மாள்,
மாவட்டத் துணைத் தலைவா் ஆா் சம்மந்தமூா்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினா் வேளாங்கண்ணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.