செய்திகள் :

121 ஆயுஷ் பணியிடங்கள் 10 நாள்களில் நிரப்பப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

தமிழகத்தில் இந்திய மருத்துவத் துறையில் (ஆயுஷ்)காலியாக உள்ள 121 பணியிடங்களும் 10 நாள்களில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

பேரவையில் சனிக்கிழமை கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினா் தளவாய் சுந்தரம், ஆயுா்வேத கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து பேசினாா்.

அதற்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் அளித்த பதில்:

சித்தா, ஆயுா்வேதம், யோகா, யுனானி, ஹோமியோபதி ஆகிய 5 பிரிவுகளிலும் காலியாக உள்ள 121 இடங்களை நிரப்பும் பணி தற்போது முடிவுற்று சான்றிதழ் சரிபாா்ப்பு, தரவரிசைப்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் 10 நாள்களில் அந்தப் பணிகள் நிறைவு பெற்று பணியிடங்கள் நிரப்பப்படும் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

முன்னதாக, மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், முதுநிலை படிப்பை நிறைவு செய்த மருத்துவா்களை வட்டார மருத்துவமனைகளில் நியமிப்பதில் கடந்த ஓரிரு மாத காலமாக நிலவி வந்த சட்டச்சிக்கல் முடிவுக்கு வந்திருப்பதால் விரைவில் கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றாா்.

விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியை பாதிக்காது: அமைச்சர் கோவி.செழியன்

விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியை பாதிக்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அருகே ஏனநல்லூர் கிராமத்தில் நகரப் பேருந்துச் சேவையை உய... மேலும் பார்க்க

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது: பஹல்காம் தாக்குதல் குறித்து சூர்யா

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது என பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி திரைக்கு வர... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் பூந்தமல்லி - போரூர் இடையே நாளை(ஏப். 28) நடைபெறுகிறது.சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய வ... மேலும் பார்க்க

எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம்: முதல்வர் ஸ்டாலின்

எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சர். பிட்டி தியாகராயரின் பிறந்த நாளை அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,பிட்டி தியாகராயர் பிறந்த... மேலும் பார்க்க

6.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது: 2 மினி லாரிகள் பறிமுதல்!

கரூர்: கரூரில் 6.5 டன் ரேஷன் அரிசியை கேரளத்துக்குக் கடத்த முயன்ற மூன்று பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 6.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் 2 மினி லாரிகளை பறிமுதல் செய்தனர். கர... மேலும் பார்க்க

விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன்: திருமாவளவன்

விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி திருபுவனையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் விடுதலைச் ச... மேலும் பார்க்க