பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
"சிந்து நதியிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தான் செல்லாது" - மத்திய நீர்வளத்துறை அமைச்சர்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 25 சுற்றுலாப் பயணிகளும் ஒரு உள்ளூர்வாசியும் கொல்லப்பட்ட கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு, 1960-ம் ஆண்டு போடப்பட்ட இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான சிந்து நதிநீர் ஒப்பத்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு முடிவு செய்தது.
அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்தில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலும் கலந்துகொண்டார்.

அதற்குப் பிறகு சி.ஆர். பாட்டீல் தன் எக்ஸ் பக்கத்தில், ``சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து மோடி அரசு எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு தேசிய நலனுக்காக முற்றிலும் நியாயமானது.
சிந்து நதியிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்வோம். வியாழக்கிழமை பாகிஸ்தானின் நீர்வள அமைச்சகத்தின் செயலாளர் சையத் அலி முர்துசாவுக்கு இந்த முடிவு குறித்து கடிதம் அனுப்பப்பட்டது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அமித் ஷாவின் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான திட்டம் விவாதிக்கப்பட்டதாகவும், ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதை உடனடியாகச் செயல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs