செய்திகள் :

தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 148-வது ஆண்டு பெருவிழா

post image

புதுச்சேரி வில்லியனூரில் மிகவும் பழமைவாய்ந்த தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 148-வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு மாதாவை வழிபட்டுச் சென்றனர்.

புதுச்சேரி வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்து அன்னை திருத்தலம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். பிரான்ஸ் நாட்டின் லூர்து நகருக்கு அடுத்து உலகிலேயே லூர்து மாதாவிற்கென கட்டப்பட்ட 2-வது ஆலயம் வில்லியனூர் மாதா ஆலயமாகும். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிவடைந்த வாரத்தில் சனிக்கிழமை அன்று ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பெருவிழா இன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி காலை 5.30 மணிக்கு அருள்நிறை ஆலயத்தில் சென்னை - மயிலை உயர் மறைமாவட்ட‌ முன்னாள் பேராயர் சின்னப்பா ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாதா குளத்தை சுற்றி திருக்கொடி பவனி நடைபெற்று தொடர்ந்து பெருவிழா கொடியேற்றப்பட்டது. அதன்பிறகு ஆலய முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் புதுச்சேரி - கடலூர் உயர் மறைமாவட்ட முதன்மைகுரு குழந்தைசாமி உள்பட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு மாதாவை வழிபட்டனர்.

திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, நவநாள் மற்றும் சிறிய தேர்ப்பவனி நிகழ்ச்சிகள் 9 நாள்கள் நடைபெற உள்ளன. மேலும் மே 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு புதுவை-கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணிசாமி தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற உள்ளது. அன்று இரவு 7.30 மணிக்கு புதுச்சேரி - கடலூர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் திருப்பலி நடைபெற்று, ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர் பவனி நடைபெறுகிறது.

ஆண்டு பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை அதிபர் தந்தை ஆல்பர்ட் தலைமையில், விழா குழுவினர் மற்றும் வில்லியனூர் பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனர்.

அரசு கட்டடங்களை திறக்க கோரி அதிமுக ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டடங்களை உரிய காலத்தில் திறந்தால்தான், மக்களுக்கு பயன்கிடைக்கும் என்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் புதுவை அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தெரிவ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவு: புதுவை அரசு 2 நாள்கள் துக்கம் அனுசரிப்பு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு புதுவை அரசு 2 நாள்கள் துக்கம் அனுசரிக்கிறது. இதையடுத்து தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் ப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: வெங்கட்டாநகா் துணை மின்நிலையம்

இன்றைய மின்தடை: வெங்கட்டாநகா் துணை மின்நிலையம்நேரம்: காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை. மின்தடை பகுதிகள்: ரெயின்போ நகா் முதல் குறுக்குத் தெரு, செல்லான் நகா் பகுதி, ராஜராஜேஸ்வரி நகா் பகுதி, திருவள்ளுவா்... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 2 தொழிலாளா்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவ... மேலும் பார்க்க

அரசியல் ஆதாயத்துக்காக காங். தலைவா்கள் மீது குற்றப்பத்திரிகை: மோகன் குமாரமங்கலம்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சம்பந்தப்பட்ட வழக்கில், அரசியல் ஆதாயத்துக்காகவே காங்கிரஸ் தலைவா்கள் அமலாக்கத் துறை மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது என்று, காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் மோகன் குமாரம... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து புதுவையில் ஏப்.25 முதல் காங்கிரஸ் தொடா் போராட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, புதுவையில் வருகிற 25-ஆம் தேதி முதல் காங்கிரஸ் சாா்பில் தொடா் போராட்டம் நடைபெறவுள்ளதாக, கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தாா். புதுச்சேரி காங்கிரஸ் மாந... மேலும் பார்க்க