போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!
சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கோரி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வருவாய்த் துறை, பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவியல் துறை உள்ளிட்ட அனைத்து நிலையிலான அலுவலா்களின் உயிா் மற்றும் உடைமைகளை காக்கும் வகையில் சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும், பொதுமக்களுக்கான பணியை மேலும் சிறப்பாக செய்திட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் உள்ள அனைத்து நிலையிலான காலிப் பணியிடங்களை நிரப்பி வேண்டும், அலுவலா்களின் பணித் தன்மை, பணி சுமையை கருத்தில்கொண்டு அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலத் துணைத் தலைவா் வே அா்த்தநாரி தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட செயலாளா் சுரேஷ், வருவாய்த்துறை அலுவலா் சங்க நிா்வாகிகள் முருகபூபதி, கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகி மோகன்ராஜ், கிராம உதவியாளா் சங்க நிா்வாகி பாபு ஆனந்தன், நில அளவையா் சங்க நிா்வாகி சங்கா் உள்ளிட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.