Travel contest : BARTER முறையை பின்பற்றும் பாலி குரங்குகள் - சுவாரஸ்ய அனுபவம்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
சுற்றுலா செல்வதற்கு பல காரணங்கள் இருக்கும். புதிய புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்வதும் பல வகையான நபர்களை சந்திப்பதும் மனதுக்கு உற்சாகத்தை தரும். சிலர் மன சோர்வு நீங்கி புத்தணர்ச்சி பெற அடிக்கடி பயணம் செய்யும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அப்படி பயணம் செய்வது மன ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும் என்பது உண்மை.
ஒரே மாதிரியான வேலையையே ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செய்து வருவது ஒருவித சலிப்பை தரும். டென்ஷன் மிகுந்த வேலையாக இருந்தால் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இன்றைய காலகட்டத்தில் பரபரப்பான வாழ்க்கை சூழலிருந்து விடுபட்டு சில நாட்கள் அமைதியான இயற்கையழகு நிரம்பிய தேசங்களுக்குச் செல்ல பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அத்தகைய அழகான அமைதியான கடவுளின் தீவு என அழைக்கப்படும் பாலி தீவு அனைத்து வயதினரும் விரும்பும் சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
இந்தோனேசியாவில் ஒரு சிறிய தீவுதான் பாலி. ஆனால் மிகவும் பிரபலமான இயற்கை அழகு நிரம்பிய சுற்றுலா தலம். வெளிநாடுகளுக்கு குழுவுடன் சேர்ந்து பயணித்தபோது ஏற்பட்ட சில சிரமங்களால் தனிப்பட்ட முறையில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாக பாலியை நாங்கள் ( நானும் என் கணவரும்) தேர்வு செய்தோம் .
பாலி பயணம்
திட்டமிட்டபடி ஐந்து நாள் பயணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைதராபாதிலிருந்து கோலாலம்பூர் வழியாக மலேசியன் ஏர்லைன்ஸ் முலம் பாலியை சென்றடைந்தோம். எங்கள் சுற்றுலா பயணத் திட்டத்தை. தனியார் சுற்றுலா நிறுவன பொதுமேளாளர் திரு.ரவி தயாரித்திருந்தார் அவர் செய்த உதவியை மறக்க முடியாது. பாலி டென்பசார் சர்வதேச விமான நிலையத்தில் ‘visa on arrival’க்கு தேவையாண கட்டணத்தை செலுத்தி எந்தவித பிரச்னைகளுமின்றி விசாவைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்தோம்.

பாலி லோக்கல் கைடு எங்களை மலர் மாலை போட்டு வரவேற்றவுடன் எங்களை ஒரு போட்டோ எடுத்து வைத்துக் கொண்டார். நாங்கள் தங்குவதற்கு குட்டா என்ற இடத்தில் வசதியான ஹோட்டல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதல் நாள் நாங்கள் இருந்த அறையிலிருந்து தெரிந்த அழகான கடற்கரையை ரசித்தவாறே ஓய்வெடுத்துக் கொண்டோம்.
அடுத்தநாள் காலை உணவிற்குப் பிறகு உலுவத்து (uluwatu) கோயிலுக்கு செல்ல தயாரானோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே இந்திய, சைனீஸ், கான்டினென்டல் என பலநாட்டு உணவு வகைகள் கிடைத்தன. உலுவத்து கோயிலுக்கு, கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதமாகத்தான் செல்ல முடிந்தது. இக்கோயில் ஒரு பிரபலமான வழிபாட்டுத் தலமாகும்.
இங்கு ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள்.. இந்த கோயில் தீவின் தென்மேற்கு கடற்கரையில் ஒரு அழகிய இடத்தில், கடலுக்கு மேல் தொங்கும் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது.
உலுவத்தின் எளிய கட்டுமானம் கிட்டத்தட்ட முற்றிலும் வெள்ளை மற்றும் சாம்பல் நிற பவளப்பாறைகளைக் கொண்டுள்ளது; இந்தக் கோயிலில் சாம்பல் நிற நீள வால் கொண்ட காட்டுக் குரங்குகள் நம் அருகில் வந்து நம்மை பயமுறுத்துகின்றன.
Barter systemஐ பின்பற்றுகின்றன இந்த குரங்குகள். Barter system (பண்டமாற்று முறை) என்பது பணத்தைப் பயன்படுத்தாமல், பொருட்கள் மற்றும் சேவைகள் நேரடியாக வர்த்தகம் செய்யப்படும் முறையாகும்.
சமீபத்தில் பாலிக்குச் சென்ற என் சகோதரரின் ஸ்பெக்ஸை பறித்துச் சென்ற குரங்கு பழங்களைக் கொடுத்தவுடன் திருப்பி தந்ததாம்.
இங்கிருந்து சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க மிகவும் அற்புதமாக உள்ளது. இந்தக் கோயிலில் மாலை வேளையில் 'Kecak' நடன நிகழ்ச்சி நடக்கிறது. திறந்தவெளி அரைவட்ட அரங்கில் ராமாயண நாட்டிய நாடகம் பார்த்தோம். அருமையாக இருந்தது.

மூன்றாம் நாள் இயற்கைக் காட்சிகள் நிறைந்த மற்றும் அமைதியான இடத்தில் உள்ள Ulun Danu Beratan கோயிலுக்குச் சென்றோம்.
பாலியின் இரண்டாவது பெரிய ஏரியான பெராட்டன் ஏரியின் கரையில் அமைந்துள்ள இந்த பிரமிக்க வைக்கும் நீர் கோயில் ஏரியில் மிதந்து, ஒரு மாயாஜால மற்றும் அமைதியான சூழலில் உள்ளது. இக்கோயில் ஏரிகளின் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாங்கள் இங்கு சென்ற போது கனத்த மழை பெய்ததால் நனைந்தபடி கோயிலை சுற்றிப் பார்த்தோம். உலுன் தனு கோயில் பாலி தீவின் சின்னங்களில் ஒன்றாகும்.
அடுத்த நாள் தனா லாட் (Tanah lot temple) கோயிலுக்குச் சென்றோம். கடலில் ஒரு பாறையில் அமைந்துள்ள தனா லாட் பிரமிக்க வைப்பதாக குறிப்பாக சூரிய அஸ்தமனத்தின் போது. கோயிலின் அழகை பாலிக்கு பயணிக்கும் எவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று.
தனா லாட் கோயில் பாலியின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகும், இது அதன் தனித்துவமான கடல் அமைப்பு மற்றும் சூரிய அஸ்தமன பின்னணிக்கு புகழ்பெற்ற ஒரு புராதான இந்து ஆலயம் தொடர்ந்து மோதும் அலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது; தனா லாட் கோயில் பாலியின் தவறவிடக்கூடாத ஒன்றாகும். கோயிலின் முக்கிய தெய்வம் தேவா பருவா என அழைக்கப்படும் கடல் கடவுள் ஆவார் இந்த கோயிலை கடல் பாம்புகள் பாதுகாக்கின்றன என்று கூறுகிறார்கள்.

இந்து மதம் பாலியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வரும் பழமையான மதம். ஹிந்துக்களின் சொர்க்க பூமியாக பாலி திகழ்கிறது. விநாயகரை வெற்றி தரும் தெய்வமாக வழிபடுகிறார்கள். இங்கு ஒவ்வொரு வீட்டிலும் கோயில் இருப்பதைப் பார்க்கலாம். கோயிலின் முகப்பில் விநாயகர் சிலையும் அருகில் அவரது வாகனமான மூஞ்சூறு சிலையும் இருக்கிறது.
கடைசி நாள் Kintamani காபி தோட்டத்திற்கு சென்றது சுவையான அனுபவம். அங்கு சிறிய கோப்பைகளில் அவகடோ காபி, கோகோ காபி ஜின்செங் காபி, மசாலா காபி, சாக்லேட் காபி என பல வித்தியாச சுவைகளில் காபி தயாரித்துக் கொடுக்கிறார்கள். ஆனால் நம்ம ஊர் பில்டர் காபி தான் பெஸ்ட்.. மிகவும் பிரபலமான பாலி காபி ‘லுவாக்’ உலகின் மிக விலையுயர்ந்த காபி வகைகளில் ஒன்று. மரநாயால் ( புனுகுப்பூனை) உண்ணப்பட்டு வெளியேற்றப்பட்ட காபி பெர்ரிகளின் பீன்களிலிருந்து தயாரிக்கப்படும் காபி, தான் "கோபி லுவாக்"

வடகிழக்கு பகுதியில் உள்ள கனன்று கொண்டிருக்கும் கிண்டாமணி எரிமலை (Live volcano) பாலியின் இயற்கை அழகு, கலாச்சார செழுமை மற்றும் சாகச நடவடிக்கைகள் ஆகியவற்றின் கலவையாக விளங்குகிறது. இது எந்தவொரு பயணியும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்..
அழகான கடற்கரைகள், அருவிகள், பசுமையான இடங்கள், ஆலயங்கள், கடலில் சாகச விளையாட்டுகள் மட்டுமின்றி அமைதியான வாழ்க்கை முறை, பாரம்பரியமிக்க இந்து கலாசாரம், நடனம், இசை என அனைத்திலுமே ஆன்மிக உணர்வு நிறைந்த இந்த தீவு உலக சுற்றுலா பயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சரியம் இல்லை..
வி. ரத்தினா ,
ஹைதராபாத்
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.