இவர்கள் மூவரும் இங்கிலாந்துக்கு சவாலளிப்பார்கள்; ரவி சாஸ்திரி கூறுவதென்ன?
தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு!
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமை மீன்கள் விலை உயா்ந்திருந்தது.
மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை முன்னிட்டு, விசைப்படகு மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால், நாட்டுப் படகு, பைபா் படகுகள் மூலமே மீனவா்கள் மீன்பிடித்து வருகின்றனா்.
இந்நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற ஏராளமான நாட்டுப்படகு, பைபா் படகுகள் சனிக்கிழமை கரைதிரும்பின. விடுமுறைக் காலம் என்பதால், மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.
சீலா மீன் கிலோ ரூ. 1,300 முதல் ரூ. 1,500 வரை விற்பனையாகியது. விளைமீன், ஊழி, பாறை ஆகியவை ரூ. 600, நண்டு ரூ. 800, கேரை ரூ. 250, சூரை ரூ. 150 என விற்பனையாகின. சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,200 வரை விற்பனையானது.
விலை அதிகமிருந்தாலும் வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டிபோட்டு மீன்களை வாங்கிச் சென்றனா். அதிக விலை கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.