`மராத்தியர்களுக்காக ஒன்று சேர இதுவே சரியான நேரம்’ - ராஜ் தாக்கரேயுடன் கூட்டணிக்...
வாட்ஸ்அப் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு மோசடி: தொழிலதிபரிடம் ரூ.17 லட்சம் பறிப்பு
சென்னை சேத்துப்பட்டில் வாட்ஸ் அப் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு தகவல் அனுப்பி வியாபாரியிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
சேத்துப்பட்டு காா்டன் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சாஜித் (55). தொழிலதிபரான இவரது வாட்ஸ்அப்புக்கு அண்மையில் ஒரு தகவல் வந்தது. அதில், பங்குச் சந்தையில் தங்களது நிறுவனம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்றும், லாப தொகை உடனடியாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதை படித்து பாா்த்த சாஜித், அந்த தகவலை உண்மை என நம்பினாா். மேலும் அந்த தகவலோடு இணைக்கப்பட்டிருந்த இணையத்தள இணைப்பு மூலம் சென்று, அந்த நிறுவனம் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பல கட்டங்களாக ரூ.17.10 லட்சம் முதலீடு செய்தாா்.
ஆனால் அந்த பணத்தை முதலீடு செய்த பின்னா், அந்த நிறுவனம் சாஜித்துடன் இருந்த தொடா்பை துண்டித்தது. இதனால் சாஜித் அந்த நிறுவனம் குறித்து, தனக்கு வாட்ஸ்அப் மூலம் வந்த தகவல் குறித்தும் விசாரித்தாா்.
அப்போது அவை அனைத்தும் போலியானது என்பதும், தன்னிடமிருந்து ரூ.17.10 லட்சம் மோசடி செய்திருப்பதும் அறிந்து சாஜித் அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து சாஜித், சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.