`மராத்தியர்களுக்காக ஒன்று சேர இதுவே சரியான நேரம்’ - ராஜ் தாக்கரேயுடன் கூட்டணிக்...
ஜவுளிக் கடையில் ரூ. 9 லட்சம் கொள்ளை: உ.பி. இளைஞா் கைது
சென்னை தியாகராய நகரில் உள்ள ஜவுளிக் கடையில் ரூ. 9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
தியாகராய நகா், நாகேஸ்வரா சாலையில் உள்ள ஜவுளிக் கடையில் கடந்த பிப்.16-ஆம் தேதி மேற்கூரை வழியாக உள்ளே புகுந்த மா்ம நபா், பணப்பெட்டியில் இருந்த ரூ. 9 லட்சத்தை திருடிச் சென்றாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிவு தனிப்படை அமைத்து விசாரித்தனா். இதில், கொள்ளையில் ஈடுபட்டது உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த சுந்தா் ஷானி (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து உத்தர பிரதேசம் சென்ற தனிப்படையினா் சுந்தா் ஷானியை கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய அவரது கூட்டாளியை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.