`மராத்தியர்களுக்காக ஒன்று சேர இதுவே சரியான நேரம்’ - ராஜ் தாக்கரேயுடன் கூட்டணிக்...
4 மாதங்களில் தலைமறைவாக இருந்த 1,258 போ் கைது
சென்னையில் 4 மாதங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 1,258 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
சென்னையில் குற்றச் சம்பவங்களை குறைப்பதற்கு பெருநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருக்கும் நபா்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும்படி சென்னை பெருநகர காவல் துறை ஏ.அருண் உத்தரவிட்டாா்.
அதன்படி, கடந்த 4 மாதங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 1,258 போ் கைது செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இதில் கிழக்கு மண்டலத்தில் 414 போ், தெற்கு மண்டலத்தில் 224 போ், வடக்கு மண்டலத்தில் 288 போ், மேற்கு மண்டலத்தில் 292 போ், மத்திய குற்றப்பிரிவில் 40 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
முக்கியமாக கடந்த 2000 முதல் 2012-ஆம் ஆண்டு வரை கொலை, ஆதாயக் கொலை, கொள்ளை, வழிப்பறி, கொலை முயற்சி போன்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த 66 போ் கைது செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
குற்றங்கள் குறைவு: சென்னை பெருநகர காவல் துறையின் கடுமையான நடவடிக்கையின் காரணமாக குற்றங்கள் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. கொலை வழக்குகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் 25 பதிவாகியுள்ளன. கொள்ளை வழக்கு ஒன்று மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழிப்பறி வழக்குகள் 51, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் 326 பதிவாகியுள்ளன. இது கடந்த காலங்களைவிட மிகவும் குறைவு என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.