`மராத்தியர்களுக்காக ஒன்று சேர இதுவே சரியான நேரம்’ - ராஜ் தாக்கரேயுடன் கூட்டணிக்...
பழச்சாறு கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு
சென்னை அண்ணாநகரில் பழச்சாறு கடை பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
பல்லாவரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இம்ரான் அஹ்மத் (35). இவா், அண்ணாநகா் ரிவா் காலனி அருகே பழச்சாறு கடை வைத்து நடத்தி வருகிறாா். இம்ரான் அஹ்மது கடை ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காலை கடையை திறக்க வந்தனா்.
அப்போது கடையின் பூட்டை உடைத்து, பணப்பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம், இரு விலை உயா்ந்த கைப்பேசிகள் திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். இது குறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.