`மராத்தியர்களுக்காக ஒன்று சேர இதுவே சரியான நேரம்’ - ராஜ் தாக்கரேயுடன் கூட்டணிக்...
சென்னை, கோவையில் நவீன வசதிகளுடன் விடுதிகள்: அமைச்சா் மதிவேந்தன் அறிவிப்பு
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்காக சென்னை, கோவையில் நவீன வசதிகளுடன் விடுதிகள் கட்டப்படும் என்று பேரவையில் அமைச்சா் மா.மதிவேந்தன் அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மானியக் கோரிக்கை மீது சனிக்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:
இறப்பிலும் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற சீரிய நோக்கத்தில் செயல்படுத்தப்பட்ட சமத்துவ மயான திட்டம் மேலும் வலுப்படுத்தப்படும். இதற்காக ரூ.8 கோடியில் எரிவாயு தகன மேடை, வாகனங்கள் மற்றும் பிரத்யேக செயலி வழங்கப்படும்.
வன்கொடுமை தடுப்புச் சட்டம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கான சிறப்பு சட்டப் பயிற்சி வழங்கப்படும். வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளைத் திறம்பட கையாள நீதி, காவல், ஆதிதிராவிடா் நலன் ஆகிய துறைகளின் அதிகாரிகளுக்கு இந்தப் பயிற்சியை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் நவீன வசதிகளுடன் கூடிய விடுதிகள் கட்டப்படும் என்றாா் அவா்.